முன்னதாகவே மோட்டோ ரோலா நிறுவனம், தனது ஒன் விஷன் (One Vision) ஸ்மார்ட் போன் உட்பட பல சாதனங்களை வரும் மே 15 ஆம் தேதி, பிரசேலின் சாவ் பவுலாவில் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தது. ஆனால், அதற்குமுன் இருந்தே இந்த ஒன் விஷன் பற்றி பல தகவல்கள் வெளியாகிய வண்ணமே இருந்தது. பல தகவல் கசிவுகளுக்கு பின்னர், இன்று இந்த ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
புதன்கிழமையான நேற்று பிரேசிலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்ற பகுதிகளுக்கும் வெகுவிரைவில் வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே, பின்புற ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 21:9 திரை விகிதம் போன்ற அமைப்பை கொண்டு வெளியாகவுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 25 மெகாபிக்சல் முன்புற கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 4D கார்னிங் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் சபையர்(sapphire) மற்றும் வெண்கலம்(bronze) ஆகிய வண்ணங்களில் வெளியாகவுள்ளது.
மோட்டோரோலா ‘ஒன் விஷன்'-ன் விலை!
299 யூரோ (23,500 ரூபாய்) என்ற விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்', நாளையிலிருந்து சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்தில் விற்பனையாகவுள்ளது. இது பிரேசிலில், ஏற்கனவே வெளியாகியிருந்தது.
அங்கு 1,999 பிரேசிலியன் ரியால் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்மிடில் ஈஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. மெக்சிகோவில் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரு வண்ணங்களில் வெளியாகவுள்ளது - சபையர் ப்ளூ(Sapphire Blue) மற்றும் வெண்கலம்(Bronze).
மோட்டோரோலா ‘ஒன் விஷன்'-ன் சிறப்பம்சங்கள்!
ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே, மேலும் கீழுமாக பொருத்தப்பட்டுள்ள இரண்டு பின்புற கேமரா, பின்புறத்தில் மோட்டோரோலா லோகோவிற்கு கீழ் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், பளபளப்பான பின்புற பேனல் என்ற அமைப்பு கொண்டு வெளியாகவுள்ளது இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்'. இரண்டு ஹைப்ரிட் சிம் ஸ்லாட்களை கொண்ட இந்த ஒன் விஷன், அண்ட்ராய்ட் பை(Android Pie) அமைப்பு கொண்டது.
6.3-இன்ச் FHD+ (1080x2520 பிக்சல்) அளவிலான திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 21:9 என்ற திரை விகிதத்தையும் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 2.2GHz எக்சினஸ் 9609 ஆக்டா-கோர் ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 512 GB வரை சேமிப்பு அளவை கூட்டிக்கொள்ளலாம்.
இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்' ஸ்மார்ட்போன். 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவினை கொண்டுள்ளது அந்த இரண்டு கேமராக்கள். 8x டிஜிட்டல் ஜூம், போர்ட்ரைட் மோட், மேனுவல் மோட், சினிமாகிராப் போன்ற பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஒரு முன்புற கேமராவுடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன், 25 மெகாபிக்சல் அளவினில் வெளியாகியுள்ளது.
3500mAh பேட்டரியுடன் வெளியாகியுள்ள இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்' ஸ்மார்ட்போன் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த சார்ஜரில் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 7 மணி நேரத்திற்கான பேட்டரியை அளிக்கும். ப்ளூடூத் v5, டைப்-சி சார்ஜ் போர்ட் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பல சென்சார்கள் பொருத்தப்பட்டு வெளியாகிறது. 160.1x71.2x8.7mm என்ற அளவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 181 கிராம் எடை கொண்டுள்ளது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்