மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்டிற்கு ரூ.16,999 என விற்பனை செய்யப்பட்டது.
மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் விலை அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் ரூ.17,499 ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய விலையின் படியே ஃப்ளிப்கார்ட்டில் விற்பனையில் உள்ளது, எனினும் இந்த நேரத்தில் மொபைல் கிடைக்கவில்லை என்பதால், ஜூலை 13, திங்கட்கிழமை அதன் அடுத்த விற்பனைக்கு திட்டமிடப்பட்டுள்ளது அதற்கும் இந்த விலை உயர்வு பொருந்தும். மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் கடந்த மாதம் நாட்டில் பாப்-அப் செல்பி கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குவாட் ரியர் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது மற்றும் நீடித்த, 5,000 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டுள்ளது.
மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்டிற்கு ரூ.16,999 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, ரூ.17,499 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ட்விலைட் ப்ளூ மற்றும் மூன்லைட் வைட் என தொலைபேசி இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் நேற்று பிற்பகல் ஃப்ளிப்கார்டில் விற்பனைக்கு வந்தது.
இரட்டை சிம் (நானோ) கொண்ட மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் மற்ற லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா சாதனங்களைப் போலவே ஆண்டிராய்டு 10ல் இயங்குகிறது. இது 6.5 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) 19.5:9 விகிதம் மற்றும் 395 பிபி பிக்சல் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 730 SoC ஆல் இயக்கப்படுகிறது, இது அட்ரினோ 618 ஜி.பீ.யூ மற்றும் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. உள் சேமிப்பு 128 ஜி.பியில் உள்ளது, மேலும் தொலைபேசியில் மைக்ரோ எஸ்.டி கார்டு (1TB வரை) பயன்படுத்தி சேமிப்பக விரிவாக்கத்தை ஆதரிக்கிறது.
மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸின் பின்புறத்தில் உள்ள குவாட் ரியர் கேமராக்களில் எஃப்/1.8 கொண்ட 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, எஃப்/2.2 கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, எஃப்/2.4 கொண்ட 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், மற்றும் எஃப்/2.4 கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார். முன்பக்கம், பாப்-அப் கேமரா கொண்ட 16 மெகாபிக்சல் செல்பி சென்சார் எஃப்/2.2 கொண்டுள்ளது.
இந்த தொலைபேசி 5,000 எம்ஏஎச் பேட்டரியை 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்கிறது, இது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும். மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் இணைப்பு விருப்பங்களில் புளூடூத் வி 5, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை 4 ஜி வோல்டிஇ ஆகியவை அடங்கும். மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸில் பின்புற கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இது பிரத்யேக கூகிள் அசிஸ்டென்ட் பொத்தானையும் கொண்டுள்ளது.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Operation Undead Is Now Streaming: Where to Watch the Thai Horror Zombie Drama
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online
Mamta Child Factory Now Streaming on Ultra Play: Know Everything About Plot, Cast, and More