Photo Credit: WinFuture
வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மோட்டோரோலா நிறுவனம், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிடுவதற்கு அழைப்பிழ் அனுப்பியுள்ளது. அன்று மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் போன்தான் வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. மோட்டோரோலா ஒன் வரிசையில் வரவுள்ள இந்த போன் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஆனால் அமேசான் ஜெர்மனி நிறுவனம், இது குறித்த சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது. முன்னதாக வெளியான மோட்டோரோலா ஒன் விஷன், மோட்டோரோலா ஒன், மோட்டோரோலா ஒன் பவர் வரிசையில் இந்த மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் வெளியாகும்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி மோட்டோரோலா ஒன் ஆக்ஷன்தான் வெளியிடப்படுமா என்பது குறித்து எந்தவித தகவலும் இல்லையென்றாலும், #CaptureTheAction என்ற ஹாஷ்-டேக் அதை உணர்த்துவது போலவே இருக்கிறது.
அமேசான் ஜெர்மனி வெளியிட்ட தகவல்படி, மோட்டோரோலா ஒன் ஆக்ஷனில், ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே, 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1080X2520 பிக்சல் ரிசல்யூஷன், 6.3 இன்ச் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது.
இதைத் தவிர ஆக்டா கோர் எக்சினோஸ் 9609 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 4ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வசதி உள்ளிட்ட வசதிகளையும் ஒன் ஆக்ஷன், கொண்டிருக்கும்.
கேமராக்களைப் பொறுத்தவரை மோட்டோரோலா ஒன் ஆக்ஷனில், 13 மெகா பிக்சல் முதன்மை ரியர் கேமரா, இன்னொரு வைட் - ஆங்கில் லென்ஸ் (அதன் திறன் எவ்வளவு என்று தெரியவில்லை), அதுமட்டுமல்லாமல் மூன்றாவது கேமராவின் திறனும் புதிராகவே உள்ளது. 3,500 எம்.ஏ.எச் பேட்டரி திறன், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ரியர் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஆண்ட்ராய்டு 9 பை இயங்கு மென்பொருள் வசதிகளால் போனின் திறன் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது. இந்த போனின் விலை அநேகமாக 23,500 ரூபாயை ஒத்திருக்கலாம். மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் அதிகாரபூர்வமாக இந்தியாவில் வெளியாகும்போது மேலும் தெளிவான தகவல்கள் கிடைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்