இந்தியாவில் மோட்டோ G9 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
மோட்டோரோலா நிறுவனம் தரப்பில் இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 24) புத்தம் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மோட்டோ G9 என்று பெயர். ஸ்நாப்டிராகன் 662 பிராசசர், 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ G9 ஸ்மார்ட்போனின் விலை 11,499 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டோ G9 ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ பிரியர்கள், புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இதனை ஃபிளிப்கார்ட் மற்றும் மோட்டோ ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பிராசசர்: குவால்காம் SD ஸ்நாப்டிராகன் 662
கேமரா: பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா அமைப்பு.
பிரைமரி கேமரா: 48 மெகா பிக்சல்
பேட்டரி சக்தி: 5,000mAh
சார்ஜர்: 20W சக்தி கொண்ட டர்போர் பவர் வசதி
விலை: 11,499 ரூபாய்
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்