மோட்டோரோலா தனது அடுத்த ஃபிளாக்ஷிப் மாடலான 'Moto X70 Air Pro' வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது
Photo Credit: Motorola
மோட்டோ எக்ஸ்70 ஏர் ப்ரோ ஜனவரி 20 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இன்னைக்கு நம்ம ஸ்மார்ட்போன் உலகத்தையே திரும்பிப் பார்க்க வச்சிருக்க ஒரு பிராண்ட் பத்திதான் பார்க்கப்போறோம். அது வேற யாரும் இல்ல, நம்ம Motorola தான்! மோட்டோரோலா இப்போ ஒரு புது அவதாரம் எடுத்திருக்காங்க. அவங்களோட 'X' சீரிஸ்ல ஒரு மான்ஸ்டர் போனை லான்ச் பண்ண ரெடி ஆகிட்டாங்க. அதுதான் Moto X70 Air Pro. இந்த போன் எப்போ வரும்னு ஆர்வமா இருந்தவங்களுக்கு ஒரு குட் நியூஸ். வர்ற ஜனவரி 20, 2026 அன்னைக்கு சீன சந்தையில இந்த போன் அதிகாரப்பூர்வமா ரிலீஸ் ஆகப்போகுது. காலையில 7:20 மணிக்கே (சீன நேரம்) இதோட லான்ச் ஈவென்ட் நடக்குது.
இந்த போனோட பேரே 'Air'னு இருக்குறதுனால, இது எவ்வளவு மெல்லியதா இருக்கும்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க. இதோட தடிமன் வெறும் 5.25 மிமீ (mm) தான்! கைல பிடிச்சா ஒரு பேப்பர் மாதிரி அவ்வளவு ஸ்லிம்மா இருக்கும். எடையை பொறுத்தவரை 186 கிராம் இருக்கு. இதுல ஒரு ரீஃபைன்ட் ஆல்-மெட்டல் பிரேம் கொடுத்திருக்காங்க. இது பாக்குறதுக்கு ரொம்பவே கிளாஸாவும், பிரீமியமாவும் இருக்கு. இதுல 6.78 இன்ச் 1.5K OLED மைக்ரோ-கர்வ்டு டிஸ்ப்ளே இருக்கு. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் இருக்கறதால கேமிங் மற்றும் வீடியோக்கள் செம ஸ்மூத்தா இருக்கும். முக்கியமா இதுல BOE Q10 மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டிருக்கு. பாதுகாப்பிற்கு அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் (Ultrasonic Fingerprint) இதுல உண்டு.
ஸ்லிம் போன் தானே, பவர் கம்மியா இருக்கும்னு மட்டும் நினைச்சிடாதீங்க! இதுல இருக்குறது உலகத்தோட மிக வேகமான Snapdragon 8 Gen 5 பிராசஸர். இது கூடவே 12GB மற்றும் 16GB RAM ஆப்ஷன்ஸ் வருது. ஸ்டோரேஜ் பொறுத்தவரை 1TB வரைக்கும் வேரியண்ட்ஸ் இருக்கு. ஆண்ட்ராய்டு 16 (Android 16) அடிப்படையிலான சாப்ட்வேர்ல இது இயங்கும். இந்த போன்ல ஒரு குவாட் கேமரா (Quad-camera) செட்டப் இருக்கு. 50MP மெயின் கேமரா கூட 3.5° கிம்பல் லெவல் AI ஆன்டி-ஷேக் சிஸ்டம் இருக்கு. அதாவது நீங்க ஓடிக்கிட்டே வீடியோ எடுத்தா கூட ஷேக் ஆகாம வரும். இதுல 3x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸும் உண்டு, இது 100x வரைக்கும் ஜூம் பண்ணும். 8K வீடியோ ரெக்கார்டிங் வசதி இருக்கறதுனால யூடியூபர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
இவ்வளவு ஸ்லிம்மான போன்ல எப்படி இவ்வளவு பெரிய பேட்டரியை வச்சாங்கன்னு தெரியல! இதுல 5,200mAh பேட்டரி இருக்கு. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இதுல இருக்கு. இது தவிர IP68 மற்றும் IP69 ரேட்டிங் இருக்கறதால தண்ணிக்கும் தூசிக்கும் பயப்படவே வேண்டாம். சீனாவுல X70 Air Pro-வா வர்ற இதே போன், இந்தியாவுக்கு வரும்போது Motorola Edge 70 Ultra அல்லது 'Signature' சீரிஸ்ல வரும்னு எதிர்பார்க்கப்படுது. இதோட விலை இந்திய ரூபாயில் சுமார் ரூ. 55,000 முதல் ரூ. 65,000 வரை இருக்கலாம். உங்களுக்கு இந்த 5.25mm ஸ்லிம் டிசைன் பிடிச்சிருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
YouTube Updates Search Filters With New Shorts Option and Simplified Sorting