Motorola நிறுவனம் தனது புதிய Moto X70 Air ஸ்மார்ட்போனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான டீசரை வெளியிட்டுள்ளது
Photo Credit: Motorola
Moto X70 Air: 6.7" pOLED, Snapdragon 7 Gen 4, 50MP கேமரா
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த மோட்டோரோலா (Motorola) நிறுவனம், இப்போது ஒரு மாஸ் கம்-பேக் கொடுத்துக்கிட்டு இருக்கு. அந்த வரிசையில், இப்போது கையில் எடுத்ததுமே 'சூப்பர்'னு சொல்ல வைக்கிற, ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டு வரப் போறாங்க. அதுதான் Moto X70 Air. நம்ம இந்திய சோஷியல் மீடியா சேனல்களில், மோட்டோரோலா ஒரு புதிய மொபைலின் டீசரை வெளியிட்டு இருக்காங்க. அது பாக்க ரொம்பவே ஸ்லிம்மா, ஸ்டைலா இருக்கு. இது சீனாவில் ஏற்கனவே லான்ச் ஆன Moto X70 Air மாடலாகத் தான் இருக்கும்னு டெக் வட்டாரங்கள்ல உறுதியா பேசிக்கிறாங்க.
இந்த போனோட ஸ்பெஷல் என்னன்னா, அதோட ஸ்லிம் டிசைன்தான். வெறும் 5.99mm தடிமன் மட்டும்தான் இருக்கு. ஆப்பிள் ஐபோன் ஏர், சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் போன்ற அல்ட்ரா-ஸ்லிம் ஃபிளாக்ஷிப் போன்களுக்கு இது ஒரு பெரிய போட்டி கொடுக்கப் போகுது. ஆனா, தடிமன் கம்மியா இருந்தாலும், இதில் 4,800mAh பேட்டரி கொடுத்திருக்காங்க என்பதுதான் பெரிய விஷயம்! அதை 68W ஃபாஸ்ட் வயர்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் மூலமா வேகமா சார்ஜ் பண்ணிக்க முடியும்.
பெர்ஃபார்மன்ஸைப் பற்றி பேசினா, இந்த போன் Qualcomm Snapdragon 7 Gen 4 சிப்செட்டை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு 4nm சிப்செட். அதனால பவர் எபிஷியன்சியும், வேகமும் சூப்பரா இருக்கும். இந்த சிப் 12GB RAM மற்றும் 512GB வரை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் வருது. இதுதவிர, Android 16-ல் இயங்குவதால், க்ளீன் ஆன அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.
கேமரா செட்டப்பும் செம கவர்கிறது. பின்பக்கம் இரண்டு கேமராக்கள் கொண்ட டூயல் செட்டப் இருக்கு. இரண்டுமே 50-மெகாபிக்சல் சென்சார்கள். ஒரு 50MP மெயின் கேமராவும், கூடவே 50MP அல்ட்ரா-வைட் கேமராவும் இருக்கு. அதுமட்டுமில்லாம, முன்பக்கம் செல்பிக்காக ஒரு 50-மெகாபிக்சல் கேமரா கொடுத்திருக்காங்க. இப்போதைய ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி, முன்னும் பின்னும் 50MP கேமரா!
டிஸ்ப்ளேவைப் பார்த்தா, 6.7 இன்ச் அளவுள்ள 1.5K ரெசல்யூஷன் கொண்ட pOLED ஸ்கிரீன் இது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் இருப்பதால், ஸ்க்ரோலிங் மற்றும் அனிமேஷன்கள் ரொம்ப ஸ்மூத்தாக இருக்கும். இது IP68 மற்றும் IP69 ரேட்டிங் உடன் வருவதால், தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் தரமும் இதில் இருக்கு.
சரி, இப்போ விலை நிலவரம் என்னன்னு பார்ப்போம். சீனாவில் இதன் விலை சுமார் CNY 2,399 (சுமார் ₹30,000) முதல் CNY 2,699 (சுமார் ₹33,500) வரை இருக்கு. இதனால, இந்தியாவில் இந்த Moto X70 Air, Motorola Edge 70 என்ற பெயரில் ₹30,000 முதல் ₹35,000 பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்பிருக்குன்னு சொல்லப்படுது.
இந்த புதிய Moto X70 Air, தடிமனைக் குறைத்து, தரமான பெர்ஃபார்மன்ஸையும், பேட்டரியையும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல சாய்ஸா இருக்கும். நீங்க இந்த போனை வாங்க ரெடியா?
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy Tab S12 Ultra, Galaxy Tab S12+ Launched With MediaTek Dimensity 9500 SoC: Price, Specifications