Motorola நிறுவனம் தனது புதிய அல்ட்ரா-ஸ்லிம் ஸ்மார்ட்போனான Moto X70 Air-ஐ அறிவித்துள்ளது
Photo Credit: Lenovo
Moto X70 Air 6.7" pOLED, Snapdragon 7 Gen 4, 4800mAh பேட்டரியுடன்
ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு பரபரப்பை கிளப்பி இருக்கிற Motorola-வோட புது வரவு: Moto X70 Air. இந்த போன் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்? வாங்க டீட்டெயில்லா (Detailed) பார்க்கலாம். முதல்ல, இந்த போன் பத்தின பெரிய விஷயமே அதோட டிசைன் தான். Motorola இந்த போனை வெறும் 5.99mm தடிமனுல, அதாவது 6 மில்லிமீட்டருக்கும் குறைவான சைஸ்ல, ரொம்பவும் ஸ்லிம்மா (Slim) செஞ்சிருக்காங்க. கிட்டத்தட்ட ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) போன்ற பெரிய கம்பெனிகளுக்கு டஃப் கொடுக்கிற மாதிரி, வெறும் 159 கிராம் எடைல, ரொம்ப லைட் வெயிட்டா (Light Weight) இருக்கு. பாக்குறதுக்கே ஒரு பிரீமியம் (Premium) லுக் இருக்கு. அதோட IP68/IP69 ரேட்டிங்கும் (Rating) கொடுத்திருக்காங்க, சோ, தண்ணி மற்றும் தூசி பத்தி கவலையில்லை.
OS: இது லேட்டஸ்ட் Android 16 ஓஎஸ்ஸில் (OS) இயங்குவது கூடுதல் சிறப்பு.
டிஸ்ப்ளே: 6.7 இன்ச் அளவுல 1.5K pOLED டிஸ்ப்ளே இருக்கு. அதோட 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) இருக்கிறதால, வீடியோ பாக்குறது, கேம் விளையாடுறது எல்லாமே கண்ணுக்கு ரொம்ப ஸ்மூத்தா (Smooth) இருக்கும். அதோட 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (Nits Peak Brightness) இருக்கிறதால வெளிச்சத்துலயும் சூப்பரா தெரியும்.
பேட்டரி: இவ்வளவு மெலிசான போன்ல 4800mAh பேட்டரி கொடுத்திருக்கிறது ஒரு பெரிய பிளஸ்! அதோட 68W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட்டும் இருக்கு. பேட்டரி பத்தி கவலையே படத் தேவையில்லை.
இந்த Moto X70 Air மொபைல் இப்போதைக்கு சீனாவுல (China) அறிமுகம் செய்யப்படுது. ஆனா, உலகளாவிய சந்தைகளுக்கு இது Motorola Edge 70 அப்படின்ற பேர்ல வரும்னு எதிர்பார்க்கப்படுது. விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரல. Moto-வோட இந்த புதிய X70 Air ஸ்மார்ட்போன், ஸ்லிம் டிசைன், பவர்ஃபுல் சிப்செட் மற்றும் பெரிய பேட்டரியோட ஒரு நல்ல பேக்கேஜா (Package) இருக்கு. இந்த போன் இந்திய மார்க்கெட்க்கு (Indian Market) வரும்போது அதோட விலையை பொறுத்து ஒரு நல்ல தேர்வா இருக்
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications