மோட்டோ G9 ஸ்மார்ட்போனில் 5,000mAh சக்திகொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவை உள்ளன.
மோட்டோ G9 ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளே உள்ளது
இந்தியாவில் மோட்டோ G9 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
மோட்டோரோலா நிறுவனம் அண்மையில் மோட்டோ G9 என்ற புத்தம் புதிய ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இதில் பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா, 20W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ரெட்மி நோட் 9 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி M21, ரியல்மி 6i ஆகிய ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக மோட்டோ G9 ஸ்மார்ட்போன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது மோட்டோ G9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் தனது முதல் விற்பனையை இன்று (ஆகஸ்ட் 31) தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று மதியம் 12 மணி முதல் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவில் மோட்டோ G9 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலையாக 11,499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ளது. மொத்தம் இரண்டு விதமான நிற வேரியன்டுகளில் மோட்டோ G9 கிடைக்கின்றன. ஃபாரஸ்ட் கிரீன், சபாரி ப்ளூ ஆகும்.
ICICI வங்கி அல்லது YES வங்கியின் கிரேடிட் கார்டு மூலம் மோட்டோ G9 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை: 6.65 இன்ச்
பிராசசர்: ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 662 SoC
ரேம்: 4ஜிபி
கேமரா: பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா உள்ளது. 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார், 2 மெகா பிக்சல் மேக்ரோ லெனஸ் கேமரா ஆகும். முன்பக்கத்தில் 8 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா உள்ளது.
இதர சிறப்பம்சங்கள்:
4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ A-ஜிபிஎஸ், USB டைப்-C, and a 3.5mm ஹெட்போன் ஜேக், பின்பக்த்தில் விரல் ரேகை சென்சார், 5,000mAh சக்திகொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவை உள்ளன.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Qualcomm Suggests Its Chips Will Power Most Galaxy S26 Models; Samsung May Produce 2nm Snapdragon 8 Elite Gen 5: Reports
YouTube Updates Search Filters With New Shorts Option and Simplified Sorting