7000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே! Motorola-வின் புதிய கிங் Moto G67 Power 5G - இந்தியாவுக்கு வருது!

Motorola நிறுவனம் தனது புதிய Moto G67 Power 5G ஸ்மார்ட்போனை Snapdragon 7s Gen 2 ப்ராசஸருடன் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது

7000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே! Motorola-வின் புதிய கிங் Moto G67 Power 5G - இந்தியாவுக்கு வருது!

இந்த கைபேசி MIL-810H மற்றும் IP64 பாதுகாப்பை வழங்கும்

ஹைலைட்ஸ்
  • 7,000mAh மெகா பேட்டரி: ஒரே சார்ஜில் 58 மணி நேரம் வரை நீடிக்கும்
  • 4K வீடியோ சப்போர்ட். க்ளியரான போட்டோஸ் எடுக்கலாம்
  • Snapdragon 7s Gen 2 ப்ராசஸர் மற்றும் 120Hz டிஸ்பிளே வேகமான பெர்ஃபார்மன்ஸ்
விளம்பரம்

பேட்டரி சார்ஜ் பத்தலன்னு கவலைப்படுற மொபைல் யூசர்களுக்கு மோட்டோரோலா ஒரு சூப்பர் செய்திய சொல்லிருக்காங்க. ஆமாங்க, மோட்டோரோலா-வோட அடுத்த பவர்ஹவுஸ் போன், Moto G67 Power 5G இந்தியாவிற்கு வரப் போகுது. அதோட லான்ச் தேதி பிக்ஸ் பண்ணியாச்சு. நவம்பர் 5-ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த போன் இந்தியால அறிமுகமாகப் போகுது.இந்த போனோட பேரே 'Power'-ன்னு இருக்கிறதால, ஃபர்ஸ்ட் பேட்டரி பத்தியே பேசிடலாம். இதுல சிலிகான்-கார்பன் டெக்னாலஜில உருவான 7,000mAh மெகா சைஸ் பேட்டரி கொடுத்திருக்காங்க. ஒரு தடவை ஃபுல்லா சார்ஜ் போட்டா, கிட்டத்தட்ட 58 மணி நேரம் அதாவது ரெண்டு நாளைக்கு மேல தாங்கும்னு கம்பெனியே சொல்லியிருக்காங்க. இதோட வேகமான சார்ஜிங் சப்போர்ட் எப்படி இருக்கும்னு தெரியல, ஆனா சார்ஜ் நிக்கிறதுல இந்த போனை அடிச்சுக்க ஆளே இல்ல.


அடுத்ததா, இந்த போனோட கேமராவைப் பார்க்கலாம். ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுத்திருக்காங்க. மெயின் கேமரா 50 மெகாபிக்சல் சோனி LYT-600 சென்சார். கேமரா குவாலிட்டி செம்மையா இருக்கும்னு எதிர்பார்க்கலாம். அதுமட்டுமில்லாம, முன்னாடி செல்பீ எடுக்கிறதுக்குனே 32 மெகாபிக்சல் கேமரா இருக்கு. பின்னால, முன்னாலன்னு எல்லா கேமராக்களுமே 4K வீடியோ ரெக்கார்டிங் பண்ணும்னு சொல்லியிருக்காங்க.

AI Photo Enhancement Engine-ம் இதுல இருக்குதாம்.
பெர்ஃபார்மன்ஸை பொறுத்தவரை, இதுல Snapdragon 7s Gen 2 ப்ராசஸர் கொடுத்திருக்காங்க. டெய்லி யூஸ் பண்றதுக்கு, கேம் விளையாடுறதுக்குன்னு எல்லாத்துக்கும் இது ஃபாஸ்ட்டா இருக்கும். கூடவே 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் வருது. அதை விர்ச்சுவல் ரேம் டெக்னாலஜி மூலமா 24GB வரைக்கும் அதிகப்படுத்திக்கொள்ள முடியும். டிஸ்பிளேவைப் பத்தி பேசினா, 6.7 இன்ச் Full HD+ டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-உடன் கொடுத்திருக்காங்க. ஸ்க்ரோலிங் மற்றும் அனிமேஷன்கள் பார்க்க செம ஸ்மூத்தா இருக்கும். பாதுகாப்புக்காக Gorilla Glass 7i புரொடக்‌ஷனும் இருக்கு.


அதிக சத்தத்துல பாட்டு கேட்க Dolby Atmos சப்போர்ட்டோட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும், Android 15-ல் இயங்கும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்கிரேடும் நிச்சயம்னு மோட்டோரோலா உறுதி அளிச்சிருக்காங்க. MIL-810H மிலிட்டரி கிரேட் பாதுகாப்பு, IP64 ரேட்டிங் மற்றும் Vegan Leather டிசைன்னு இந்த போன் டிசைன் மற்றும் உறுதியிலும் அசத்துது. இந்த போன் Flipkart-ல விற்பனைக்கு வரும்னு கன்ஃபார்ம் ஆயிருக்கு. இந்த போனோட விலை எவ்வளவு இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க? கமெண்ட் செக்‌ஷன்ல சொல்லுங்க!

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »