20W டர்போ பவர் சார்ஜிங் வசதியுடன் மோட்டோ ஜி 5G பிளஸ் விரைவில் வருகிறது!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 8 ஜூலை 2020 11:00 IST
ஹைலைட்ஸ்
  • Moto G 5G Plus is priced in Europe starting at EUR 349
  • The phone is available in a single Surfing Blue colour option
  • Moto G 5G Plus offers expansion of storage to up to 1TB

20W டர்போ பவர் சார்ஜிங் வசதியுடன் மோட்டோ ஜி 5G பிளஸ் விரைவில் வருகிறது!

மோட்டோரோலா நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போனாக மோட்டோ ஜி 5G பிளஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போன் குவாட் கேமரா அமைப்பு மற்றும் ஸ்னாப்டிராகன் 765 SoC உடன் வருகிறது. மோட்டோ ஜி 5G பிளஸ் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் 20W டர்போ பவர் சார்ஜிங் கொண்டுள்ளது. முன் இரட்டை செல்ஃபி பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே உள்ளது மற்றும் ஒரு கைரேகை சென்சால் பக்கத்தில் உள்ளது. இந்த போன் இன்று முதல் ஐரோப்பாவில் விற்பனையில் கிடைக்கிறது.

மோட்டோ ஜி 5G பிளஸ் விலை, கிடைக்கும் தன்மை

மோட்டோ ஜி 5G பிளஸ் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு யூரோ 349 (தோராயமாக ரூ.29,400) மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு யூரோ 399 (தோராயமாக ரூ.33,700) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒற்றை சர்ஃபிங் ப்ளூ கலர் விருப்பத்தில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இன்று முதல் ஐரோப்பாவில் விற்பனையில் உள்ளது, மேலும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற சந்தைகளில் எதிர்காலத்தில் வெளியாக உள்ளது. 

மோட்டோ ஜி 5G பிளஸ் விவரக்குறிப்புகள்

மோட்டோ ஜி 5G பிளஸ் ஆண்ட்ராய்டு 10ல் இயங்குகிறது மற்றும் இரட்டை சிம் ஸ்லாட்டை (நானோ + நானோ) கொண்டுள்ளது. இது 6.7 அங்குல முழு எச்டி+(1080x2520 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த போன் ஸ்னாப்டிராகன் 765 ஆக்டா கோர் SoCல் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை (1TB வரை) பயன்படுத்தி சேமிப்பு மேலும் விரிவாக்கம் செய்துகொள்ளலாம். 

மோட்டோ ஜி 5G பிளஸின் பின்புறத்தில் ஒரு சதுரத்திற்குள் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இந்த போனில் எஃப்/1.7 கொண்ட 48 மெகாபிக்சல் பின்புற கேமரா, 118 டிகிரி மற்றும் எஃப்/2.2 துளை கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், எஃப்/2.2 துளை கொண்ட 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் ஒரு எஃப்/2.2 கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. முன்பக்கம், மோட்டோ ஜி 5G பிளஸ் இரட்டை பஞ்ச் கட் அவுட்டுக்குள் இரட்டை செல்ஃபி கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது எஃப்/2.0 கொண்ட 16 மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் எஃப்/2.2 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டுள்ளது. ஸ்கிரீன் ஃப்ளாஷ் ஆதரவு உள்ளது.

மோட்டோ ஜி 5G பிளஸ் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் 20W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது. நிறுவனம் தொலைபேசியில் இரண்டு நாள் பேட்டரி சார்ஜ் இருக்கும் என்று கூறுகிறது. இது ஒரு பக்க-பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது, மேலும் இணைப்பு விருப்பங்களில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 5 ஜி எஸ்.ஏ/ என்எஸ்ஏ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் வி 5.1, வைஃபை கொண்டுள்ளது.


OnePlus 8 vs Mi 10 5G: Which Is the Best 'Value Flagship' Phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 765
Front Camera 16-megapixel + 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2520 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  2. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
  3. Tecno Spark Go 5G: ₹10,000-க்குள்ள இந்தியாவுலயே ஸ்லிம்மான 5G போன்! ஆகஸ்ட் 14-ல் வெளியீடு!
  4. Panasonic-ன் புது மிரட்டல் டிவி! MiniLED தொழில்நுட்பம், Dolby Atmos-உடன் வெளியீடு!
  5. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  6. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
  7. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  8. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  9. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  10. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.