அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போன் வெரிசான் தளத்தில் விற்பனையாகிறது.
இந்த 'மோட்டோ E6' ஸ்மார்ட்போனிற்கு 149.99 டாலர்கள் (சுமார் 10,300 ரூபாய்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லெனோவாவிற்கு சொந்தமான மோட்டோரோலா மொபைல் நிறுவனம் வியாழக்கிழமை தனது மோட்டோ E-தொடரில் புதிய ஸ்மார்ட்போனான 'மோட்டோ E6' அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோ E-தொடரின் முந்தைய தலைமுறை ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில், புதிய 'மோட்டோ E6' ஸ்மார்ட்போனே ஒரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன். நாட்ச் டிஸ்ப்ளே, ஹோல்-பன்ச் போன்ற தற்போதைய ட்ரெண்டை மோட்டோ E6 தவிர்த்து பழைய வடிவிலேயே வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டு முன்பு வெளியான ஸ்மார்ட்போன்களின் தோற்றத்தை போன்றே தோற்றம் கொண்டுள்ளது இந்த புதிய 'மோட்டோ E6'.
நீலம் (Navy Blue) மற்றும் கருப்பு (Starry Black) என இரு வண்ணங்களில் அறிமுகமாகவுள்ள இந்த 'மோட்டோ E6' ஸ்மார்ட்போனிற்கு 149.99 டாலர்கள் (சுமார் 10,300 ரூபாய்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போன் வெரிசான் தளத்தில் விற்பனையாகிறது. T-மொபைல், பூஸ்ட் மொபைல் என மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கனடாவில் விரைவில் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் எப்போது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
சென்ற ஆண்டு வெளியான மோட்டோ E5 ஸ்மார்ட்போனிலிருந்து பெரிதும் மாற்றம் இல்லாமலேயேதான் இந்த 'மோட்டோ E6' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அமைந்துள்ளது. ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் HD+(720x1440 பிக்சல்கள்) திரை, 18:9 திரை விகிதம், 296ppi திரை அடர்த்தி என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. ஒரே ஒரு சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 435 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு அறிமுகமாகியுள்ளது. ஆனால், ஆசியாவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சிம் கார்டு வசதியுடனே அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான ஒரே ஒரு கேமரா மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. 4G, வை-பை, ப்ளூடூத் v4.2, GPS என அனைத்து வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 149.7x72.3x8.57mm என்ற அளவு கொண்டும் 159 கிராம் எடை கொண்டும் அறிமுகமாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped