லெனோவா நிறுவன ப்ராண்டான மோட்டோ, லேட்டஸ்ட் பட்ஜெட் மாடலாக இ5 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் இன்று வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்வு மதியம் இரண்டு மணிக்கு புதுடெல்லியில் நடைபெறுகிறது. மோட்டோ இ5 ப்ளஸ்ஸின் முக்கிய அம்சங்கள் அதன் 5000 எம்ஏஹச் பேட்டரி, வேகமாக சார்ஜ் செய்யும் திறன் மற்றும் பின்பகுதியில் பாலிமர் க்ளாஸ் பேனல் இருக்கிறது. இது கருப்பு, கிரே, மினரல் ப்ளூ மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலின் அறிமுக விலை, வெளியிடும் தேதி, அறிமுக ஆஃபர் பற்றிய தகவல்கள் அனைத்துமே நிகழ்வில் அறிவிக்கப்படும். இந்த மாடலுக்கான அறிவிப்பு மோட்டோ இ5, மோட்டோ இ5 ப்ளே மற்றும் மோட்டோ ஜி6 ஆகிய மாடல்களுடன் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
நாங்கள் மோட்டோ E5 பிளஸ் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் இந்திய மாடலில் ஒன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்; இருப்பினும் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் வெளியிட்டிற்கு பிறகு தெளிவுபடுத்துவோம். மோட்டோ இ5 ப்ளஸ் ஒரு அமேசான் பிரத்தியேக ஆன்லைன் வெளியீடு என்றாலும் ஆஃப்லைனில் மோட்டோ ஹப் ஸ்டோர்ஸ் வழியாகவும் கிடைக்கும்.
மோட்டோ இ5 ப்ளஸ் அம்சங்கள்:
இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 6 இன்ச் ஹச்டி (720*1440 பிக்சல்ஸ்) ஐபிஎஸ் எல்சிடீ டிஸ்பிளே 18:9 அஸ்பெக்ட் அளவில் உள்ளது. இதில் குவால்கேம் ஸ்னாக்ட்ராகன் 435 எஸ்ஓசி பிராசஸர் 3 ஜீபி ரேம், 32 ஜீபி உள் சேமிப்பு வசதியும், மைக்ரோ எஸ்டி மூலம் 128 ஜீபி வரை சேமிப்பு வசதியும் உள்ளது. 5000 எம்ஏஹச் பேட்டரி டர்போ சேர்கிங் வசதியுடன் கிடைக்கிறது.
மோட்டோ இ5 பிளஸ்ஸில் எஃப்/2.0 அபெர்சர், லேசர் ஆட்டோ போகஸ் மற்றும் எல்ஈடீ ஆகிய வசதிகளுடன் கூடிய 12 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் எஃப்/2.2 அபேர்சர் மற்றும் செல்ஃபி லைட் வசதியுடன் கூடிய 8 மெகா பிக்ஸல் கேமரா வசதி உள்ளது. மோட்டோ இ5 ப்ளஸ்ஸில் 4ஜி வோல்ட், டூ பேண்ட் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதியுடன், ப்ளூடூத், ஜீபிஎஸ்/ ஏ-ஜீபிஎஸ், க்ளோனஸ், எஃப்எம் ரேடியோ, 3.5 மிமி ஹெட்போன் ஜாக் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி ஆகிய வசதிகள் இருக்கின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்