ஷாவ்மி எம்ஐ.காமில் டிவி செட் மற்றும் மொபைல் பாகங்களுக்கான ஆர்டர்களையும் எடுத்து வருகிறது.
பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் பொருட்களை விற்பனை செய்ய ஈ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி
மத்திய அரசு பொது ஊரடங்கை மே 17 வரை நீட்டித்துள்ள நிலையில், சில நடைமுறைகளுக்கு தளர்வு அளித்துள்ளது. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டல வாடிக்கையாளர்கள் ஷாவ்மி, ரெட்மி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்ய முடியும் என்று இந்த ஷாவ்மி தெரிவித்துள்ளது.
நாட்டின் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் நிறுவனம் பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக Xiaomi Twitter-ல் தெரிவித்துள்ளது. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டல பின்கோடுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இப்போது சிவப்பு மண்டல வாடிக்கையாளர்கள் ஷாவ்மி தயாரிப்புகளை வாங்க முடியாது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டிலிருந்து தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம் என்று நிறுவனத்தின் தலைவர் மனு குமார் ஜெயின் தெரிவித்தார். இந்தியாவில், Poco X2 விற்பனை பிளிப்கார்ட்டில் இருந்து தொடங்கியுள்ளது என்று போகோ தலைவர் சி மன்மோகன் தெரிவித்தார். இருப்பினும், ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் மட்டுமே விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
Mi.com-ல் இருந்து ஃப்ரீபெய்ட் ஆர்டர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளவோம் என்று ஷாவ்மி குறிப்பிட்டுள்ளது. தயாரிப்பு எத்தனை நாட்களுக்குள் வழங்கப்படும் என்பது உள்ளூர் நிர்வாகத்தைப் பொறுத்தது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்கோடில் அத்தியாவசிய பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளன.
Amazon.in ஏற்கனவே எம்ஐ ஏ 3, போக்கோ எஃப் 1, ரெட்மி 8 ஏ டூயல், ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 ப்ரோ உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. மறுபுறம், போகோ எக்ஸ் 2, ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி 8 ஆகியவை Flipkart-ல் இருந்து கிடைக்கின்றன. ஷாவ்மி அனைத்து அரசு விதிமுறைகளுக்கும் இணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.
How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Best Refrigerator Deals
Amazon Great Indian Festival 2026: Best 55-Inch Smart TV Deals