இந்தியாவில் கடந்த மே மாதம் எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விலை 49,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஐ 10i ஸ்மார்ட்போனில் குவால்காம் 730G SoC பிராசசர், அமோலேட் டிஸ்பிளே, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்கள் உள்ளன.
இந்தியாவில் எம்ஐ நோட் 10 லைட் ஸ்மார்ட்போன், எம்ஐ 10i என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது.
ஷாவ்மியின் புத்தம் புதிய எம்ஐ நோட் 10 ஸ்மார்ட்போன் அண்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 3டி வளைவு அமோலேட் டிஸ்பிளே, குவால்காம் ஸ்நாப்டிராகன் 730G SoC பிராசசர் ஆகியவை உள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் எம்ஐ நோட் 10 விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஐரோப்பாவில் எம்ஐ நோட் 10 ஸ்மார்ட்போனின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்தியாவுக்கு வருகிறது. இந்தியாவில் இதன் பெயர் எம்ஐ 10i ஆகும்.
எம்ஐ 10 சீரிஸில் இது மூன்றாவது ஸ்மார்ட்போனாகும். இதற்கு முன்பாக எம்ஐ நோட் 10, எம்ஐ நோட் 10 ப்ரோ ஆகியவை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே கூறியபடி வரவுள்ள எம்ஐ 10i ஸ்மார்ட்போனில் குவால்காம் 730G SoC பிராசசர், அமோலேட் டிஸ்பிளே, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்கள் உள்ளன.
Mi Note 10 Lite will be Rebranded as Mi 10i for Indian market.
— the_tech_guy (@_the_tech_guy) August 9, 2020
codename : tocoin pic.twitter.com/4uxblF72q6
இந்தியாவில் எம்ஐ நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் ஐரோப்பாவில் இதன் விலை 349 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 30,800 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி வேரியன்ட் ஆகும். இதே போல், 6ஜிபி ரேம் 128ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 399 யூரோ (இந்திய மதிப்பில் 35,200 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மிட்நைட் பிளாக், நெபுலா பர்பிள், கிளாசியர் வைட் ஆகிய நிறங்களில் உள்ளன.
இந்தியாவில் கடந்த மே மாதம் எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விலை 49,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.47 இன்ச்
டிஸ்பிளே: அமோலேட்
நாட்ச்: வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச்
பிராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 730G SoC
கேமரா: பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன.
முன்புறத்தில் 16 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா உள்ளன
பேட்டரி சக்தி: 5,260mAh
சார்ஜர்: 30W ஃபாஸ்ட் சார்ஜ் - டைப் சி
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Apple Announces iOS 27 Release Date: Here’s When It’s Arriving on Your iPhone
Apple Watch Series 12, Watch Ultra 4 Announced With New Health Sensors, S11 Chip: Price in India, Specifications and New Features