தொலைக்காட்சி பெட்டிகள் நமது வீடுகளில் மிகவும் சாதாரண உபயோக பொருளாகிவிட்ட நிலையில், பல முன்னணி நிறுவனங்கள் இந்தப் 'பழையது' என்ற எண்ணத்தை மாற்ற முடிவெடுத்து செயல்பட்டு வந்தனர்.
மிகவும் பரபலமான நிறுவனங்களான அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள், அமேசான் ஃவையர் ஸ்டிக் மற்றும் குரோம்காஸ்ட் போன்ற நவீன தொலைக்காட்சி உபகரணங்கள் மக்களிடயே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே தனது பல தயாரிப்புகளால் மக்களை கவர்ந்து வரும் சியோமி எம்.ஐ தனது சொந்த தயாரிப்பான ஸ்மார்ட் செட் ஆப் பாக்ஸை தயாரிக்க முடிவெடுத்துள்ளது.
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட் தொழிநுட்பம் 1,900 ரூபாய்க்கு விற்பனை செயப்பட உள்ளது. தனது சக தயாரிப்பாளர்களை விட மிக மலிவான விலையில் இதை விற்பனை செய்ய உள்ளதால் சியோமியின் இந்த புதிய தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்.டி.எம்.ஐ மற்றும் ஏவி என இரு வசதிகளுடைய இந்த ஸ்மார்ட் டிவி 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி சேமிப்பு வசதியுடன் வெளியாகிறது. யுஎஸ்பி மற்றும் டி.டி.ஹெச் உடன் இணைத்துக்கொள்ளும் வகையிலான டிசைன் இந்த செட் ஆப் பாக்ஸில் இருக்கும்.
மேலும் இதற்கு முன்னர் சியோமி சார்பாக வெளியாகிய எம்.ஐ பாக்ஸ் 4 மற்றும் எம்.ஐ பாக்ஸ் 4சி போன்ற தயாரிப்புகள் சீனாவில் மட்டும் வெளியாகியுள்ள நிலையில், தற்போது சியோமி நிறுவனத்தின் எம்.ஐ டிவி ப்ரோ மற்றும் எம்.ஐ டிவி 4ஏ ப்ரோ இப்போது இந்தியாவில் வெளியாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்