ஷாவ்மி சார்பில் இன்று ‘ஸ்மார்ட்டர் லிவ்விங் 2020' என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இன்று பிற்பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. அதில் Mi Band 4, Mi TV 65-இன்ச் உள்ளிட்ட புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மி வெளியிட்ட டீசரை வைத்துப் பார்க்கும்போது, இன்று புதிய வாட்டர் ப்யூரிஃபையர் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. அடுத்த வரவுள்ள எம்.ஐ டிவி-யில் நெட்ஃப்ளிக்ஸ் இணைப்பும் இருக்கும் என்பதும் டீசர் மூலம் நமக்குப் புரிகிறது.
லைவ் நிகழ்ச்சியைப் பார்க்க:
Mi Band 4
இன்றைய நிகழ்ச்சியில் எந்தப் பொருட்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து தொடர்ந்து டீசர் மூலம் தெரிவித்து வந்தது ஷாவ்மி. அதன் மூலம் இன்று Mi Band 4 அறிமுகமாகும் என்பது உறுதியாகியுள்ளது. அமேசான் தளம் மூலம், இந்த புதிய பேண்ட் விற்கப்படும். சீனாவில் இந்த பேண்ட் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. 0.95 இன்ச் வண்ண அமோலெட் டச்-ஸ்க்ரீன், 120*240 பிக்சல் ரெசல்யூஷன் அம்சங்கள் இதில் இருக்கும். 20 நாட்களுக்கு இதன் சார்ஜ் இருக்கும் எனப்படுகிறது. சைக்கிலிங், உடற்பயிற்சி, ஓட்டம், நடை என எல்லாவற்றையும் இந்த பேண்ட் கண்காணிக்கும்.
நீச்சலின் போதும் இந்த பேண்ட்-ஐ அணிந்திருக்க முடியும். இதில் மைக்ரோஃபோனும் உள்ளது. அதன் மூலம் கூகுள் அசிஸ்டென்ட் வசதியும் வர வாய்ப்புள்ளது.
இதன் விலை என்ன என்பது தெரியவில்லை. ஆனால், சீனாவில் வெளியான இதன் விலையை வைத்துப் பார்க்கும்போது, 1,700 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய்க்குள் இருக்கும் என்று கணிக்க முடிகிறது. Mi Band 3, 1,999 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது.
Mi TV 65-இன்ச் டிவி (எதிர்பார்க்கப்படுகிறது):
Mi Band 4 உடன் Mi TV 65-இன்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சியும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வந்துள்ளன. 4K எல்.ஈ.டீ திறன் கொண்ட இந்த டிவி-தான் இந்திய சந்தையில் சிறந்ததாக இருக்கும் என்று ஷாவ்மி தரப்பு சொல்கிறது.
டீசர்கள் மூலம் இந்த டிவி 65 இன்ச் இருக்கும் என்று சொல்ல முடிகிறது. இதற்கு முன்னரே வெளி சந்தையில் 65 இன்ச் டிவிக்களை ஷாவ்மி அறிமுகம் செய்துள்ளது. அதில் ஒன்றாக இந்த டிவி இருக்கலாம். இந்த டிவி குறித்த எந்த தகவலையும் ஷாவ்மி தெரிவிக்கவில்லை. அதனால், அதன் விலை குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.
Mi வாட்டர் ப்யூரிஃபையர் (எதிர்பார்க்கப்படுகிறது)
ஷாவ்மி நிறுவனம், சீக்கிரமே இந்திய சந்தைக்கு வாட்டர் ப்யூரிஃபையரைக் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இது குறித்து அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டீசரில், ஒரு இயந்திரத்திலிருந்து டம்ப்ளர் ஒன்றில் நீர் நிரம்புவது தெரிகிறது. டீசரில் மேலும், “ஒவ்வொரு துளியும் முக்கியமானது” என்று சொல்லப்படுகிறது.
உலக அளவில் பல இடங்களில் ஷாவ்மி, ப்யூரிஃபையர்களை வெளியிட்டுள்ளது. எனவே இந்தியச் சந்தைக்கும் அவை வரலாம். இந்த சாதனத்தில் வை-ஃபை இணைப்பு இருக்கும். அதன் மூலம் ப்யூரிஃபையரின் தரம் குறித்தும் நீரின் தரம் குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.
ஷாவ்மியின் இரவு விளக்கு
இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைத்த ஒரு பொருளும் இன்று அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அது குறித்தும் ஒரு டீசர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதில், அசைவுகள் மூலம் இரவு விளக்கு ஒன்று எரிகிறது. இது குறித்து தெரிந்து கொள்ள நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்