சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 14,998 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகவுள்ளது.
Mi A3 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் ஸ்பெய்னில் அறிமுகப்படுத்தப்பட்டது
'Mi A3' ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக நாளை இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்றே வெளியாகியுள்ளது. இந்த புதிய Mi ஸ்மார்ட்போனின் விலை, அமேசான் தளத்தில் ஒரு டிவிட்டர் பயன்பாட்டாளரால் பார்வையிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் சியோமி நிறுவனம், இந்த 'Mi A3' ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 21-ல் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை அறிவித்திருந்தது. இந்த நிறுவனம், 'Mi A3' ஸ்மார்ட்போன் பற்றிய டீசர்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளது. Mi A2-வின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனான இந்த Mi A3, மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவை கொண்டுள்ளது. 4,030mAh அளவிலான பேட்டரி, ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் போன்ற சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 14,998 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகவுள்ளது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட 'Mi A3' ஸ்மார்ட்போன் 14,998 ரூபாய் என்ற விலையிலும், 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'Mi A3' ஸ்மார்ட்போன் 17,498 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கலாம்.
![]()
ஆனால், இந்த விலைகள் கடந்த மாதம் ஸ்பெய்னில் வெளியான 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலையிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளது. ஸ்பெய்னில் இந்த ஸ்மார்ட்போனின் 64GB வகை 249 யூரோக்கள் (சுமார் 19,800 ரூபாய்), மற்றும் 128GB வகை 279 யூரோக்கள் (சுமார் 22,100 ரூபாய்) என்ற விலைகளில் அறிமுகமானது
இரண்டு நானோ-சிம் வசதி கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 6.08-இன்ச் HD+ திரை (720x1560 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையை கொண்டுள்ளது. ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
3 பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4,030mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 4G, வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 வசதி, டைப்-C சார்ஜர், 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features