இதுவரை A3-யின் விலை என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.
Photo Credit: Twitter/ Xiaomi
ஆண்ட்ராய்டு 9.0 மென்பொருள் மூலம் இந்த எம்.ஐ A3 போன் இயங்கும் என்பதை இதுவரை வெளியான தகவல் கசிவை வைத்து சொல்ல முடிகிறது
இன்று மதியம் சியோமி நிறுவனம், எம்.ஐ A3 ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. ஸ்பெயினில் 3 மணிக்கு எம்.ஐ A3-ஐ சியோமி ரிலீஸ் செய்கிறது. இந்த போனுடன், எம்.ஐ A3 லைட் போனும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன், எம்.ஐ CC9e என்ற பெயரில் சென்ற மாதம் சீனாவில் வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இளைஞர்களைக் குறிவைத்து வெளியிடப்பட்ட அந்த ஸ்மார்ட்போனில், அதிக திறன் கொண்ட கேமரா இருந்தது.
சியோமி ஸ்பெயின் இணையதளத்தின்படி, இன்று மதியம் 3 மணிக்கு (இந்திய நேரப்படி, மாலை 6:30 மணிக்கு), எம்.ஐ A3 வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் ரிலீஸ் நேரலை மூலம் நடக்குமா அல்லது நிகழ்ச்சி நடத்தி அறிமுகம் செய்யப்படுமா என்பதில் தெளிவில்லை.
எம்.ஐ A3 விலை:
இதுவரை A3-யின் விலை என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. ஆனால், சீனாவில் வெளியிடப்பட்ட CC9e போனின், இன்னொரு வடிவம்தான் இந்த A3 என்று சொல்லப்படுவதால், சீன விலையை வைத்து, இதன் விலையை ஓரளவு கணிக்க முடிகிறது. சீனாவில் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட எம்.ஐ CC9e போனின் விலை, ரூ.13,000 ஆக இருக்கிறது. அதேபோல 6ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகையின் விலை, ரூ.14,000 ஆக இருக்கிறது. மேலும், 6ஜிபி + 128ஜிபி வகையின் விலை 16,000 ரூபாயாக உள்ளது.
இதற்கு முன்னர் வந்த எம்.ஐ A வரிசை போன்கள், இந்தியாவில் விரைவாக அறிமுகம் செய்யப்பட்டன. எனவே, இந்த A3 போனும் விரைவில் இந்திய மார்க்கெட்டிற்கு வரும். ஆனால், எப்போது என்பது குறித்து எந்தவித உறுதி செய்யப்பட்ட தகவல்களும் இல்லை. மேலும் எம்.ஐ A3 லைட் போன், இந்தியாவிற்கு வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
எம்.ஐ A3 சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 9.0 மென்பொருள் மூலம் இந்த எம்.ஐ A3 போன் இயங்கும் என்பதை இதுவரை வெளியான தகவல் கசிவை வைத்து சொல்ல முடிகிறது. 6.0 இன்ச் முழு எச்.டி+ ஆமோலெட் திரையுடன் வாட்டர்-டிராப் நாட்ச் கொண்டிருக்கும் இந்த போன். குவால்கம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்.ஓ.சி ப்ராசஸர் மூலம் A3 இயங்கும். போனின் பின்புறத்தில் 48 மெகா பிக்சல் முதன்மை கேமரா இருக்கும் என்றும், 8 மற்றும் 2 மெகா பிக்சல் திறன் கொண்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் தகவல். A3-யின் முன்புறத்தில் 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இருக்கும்.
4ஜிபி ரேம் வசதி, 128ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த போனில் பார்க்கலாம். 2 நானோ சிம் கார்டு ஸ்லாட்டுகள், சேமிப்பு வசதியை பெருக்கிக் கொள்க்க மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் கொண்ட டிசைனை A3 பெற்றிருக்கும். 4,030 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி, வெகு நேரம் சார்ஜை தக்கவைக்கும். டைப் சி-ஃபாஸ்ட் சார்ஜ், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற இதர அம்சங்களையும் இந்த ஸ்மார்ட் போன் கொண்டிருக்கும். நீலம், வெள்ளை, கருப்பு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket