Xiaomi Mi 10 வெளியீடுக்கு இன்னும் ஒரு நாள் தான் உள்ளது. வெளியீட்டு நிகழ்வு நெருங்கி வருவதால், நிறுவனம் அதன் வரவிருக்கும் முதன்மை போனில் அதிக டீஸர்களைக் கைவிட்டுள்ளது. ஜியோமியின் புதிய டீஸர்கள் Mi 10-ஐப் பற்றிய ஒரு டன் புதிய விவரங்களை வெளிப்படுத்துகின்றன.
அதிகாரப்பூர்வ Xiaomi வெய்போ கணக்கு ஒரு பதிவின் மூலம் பகிரப்பட்டது, Mi 10 ஒற்றை hole-punch மற்றும் 1,120 நைட்ஸ் உச்ச பிரகாசத்துடன் ஒரு வளைந்த AMOLED டிஸ்பிளே இடம்பெறும். பேனலில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதமும் 180 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதமும் இருக்கும். Mi 10-ன் HDR10 + டிஸ்பிளே தொழில்ரீதியாக அளவீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் இது 5000000:1 என்ற மாறுபட்ட விகிதத்தை வழங்கும், இது DCI-P3 வண்ண வரம்பு ஆதரவுடன் முழுமையானது.
போனின் AMOLED டிஸ்பிளேவுக்கு தொழில்துறை முன்னணி Delta E மற்றும் JNCD அளவீடுகளை அடைந்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இது நீல ஒளி வெளிப்பாட்டிலிருந்து பாதுகாப்பதற்காக TUV-Rheinland சான்றிதழோடு வருகிறது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் அதன் வரவிருக்கும் முதன்மை போனில் சொந்த DC Dimming ஆதரிப்பதாக கூறுகிறார்.
குவாட் ரியர் கேமரா அமைப்பை (quad rear camera setup) பேக் செய்வதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள Mi 10, பயனர்கள் அதிர்ச்சியூட்டும் 7680x4320 பிக்சல் தெளிவுதிறனில் 8K வீடியோக்களை பதிவு செய்ய அனுமதிக்கும் என்று ஜியோமி கூறுகிறது. சரவுண்ட் சவுண்ட் அனுபவத்திற்காக Mi 10 ஆனது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் (dual stereo speakers) பொருத்தப்பட்டிருக்கும், மேலும் வைஃபை 6 ஆதரவிலும் தொகுக்கப்படும். கீக்பெஞ்ச் பட்டியலின்படி, 8GB RAM உடன் இணைக்கப்பட்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் Mi 10 இயக்கப்படும்.
ஜியோமி, Mi 10-ல் 4,500mAh பேட்டரி இடம்பெறும் என்று வெளிப்படுத்தியது. இது 50W வயர்டு ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவை வழங்குகிறது, இது 45 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக டாப் அப் செய்யும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த போன் 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. Xiaomi Mi 10 சாம்சங்கிலிருந்து ISOCELL Bright HMX சென்சார் பயன்படுத்தும் 108 மெகாபிக்சல் பிரதான கேமராவை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது. Mi 10 உடன் மிகவும் சக்திவாய்ந்த பதிப்பும் இருக்கும் - தற்காலிகமாக Mi 10 Pro என அழைக்கப்படுகிறது - இது நாளைய நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக செல்லும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்