ஷாவ்மி எம்ஐ 10 மே 8 ஆம் தேதி லைவ்ஸ்ட்ரீம் நிகழ்வு மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
எம்ஐ 10 பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது
Mi 10 மார்ச் 31 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது, ஆனால் நாடு தழுவிய ஊரடங்கால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்திய ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட பின்னர் சீன நிறுவனம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யத் தொடங்கியது. இந்த முறை எம்ஐ 10-ன் புதிய வெளியீட்டு தேதி இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. 108 மெகாபிக்சல் கேமரா கொண்ட இந்த போன் மே 8 வெள்ளிக்கிழமை அறிமுகமாகவுள்ளது.
ஷாவ்மி இந்த போனை இந்தியாவில் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளது. சீனாவில் எம்ஐ 10-க்கான விலை 3,999 CNY (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42,400)-ல் இருந்து தொடங்குகின்றன. இந்தியாவில் இந்த போனின் விலை குறித்து ஷாவ்மி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
எம்ஐ 10, நிறுவனத்தின் MIUI 11 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்கும். இந்த போனில் 6.67 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஒரு ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் உள்ளது.
போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இந்த கேமராவில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்களுடன் வருகிறது. இந்த கேமராவில் 8 கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு உள்ளது. செல்ஃபி எடுக்க 20 மெகாபிக்சல் கேமரா உள்ளது. போனின் உள்ளே 4,780 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதனுடன் 30W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு உள்ளது.
Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999