2026-ம் ஆண்டு அறிமுகமாகும் iPhone மாடல்களின் விலைகள் அதிகரிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது
சாம்சங்கின் நினைவக உத்தி 2026 ஆம் ஆண்டில் ஐபோன் விலையை உயர்த்தக்கூடும்
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டுல எப்போதும் டாப் கம்பெனிகளா இருக்குறது Apple மற்றும் Samsung தான்! இப்போ இந்த ரெண்டு கம்பெனிகளுக்கும் இடையில, ஒரு பெரிய சிக்கல் உருவாகியிருக்கு! அதோட விளைவு, அடுத்த வருஷம் 2026-ல் வரப்போகிற iPhone மாடல்களின் விலையை தாறுமாறாக உயர்த்தப் போகுதுன்னு தகவல் கசிஞ்சிருக்கு. இந்த சிக்கலுக்குக் காரணம், Samsung நிறுவனம் எடுத்திருக்கிற ஒரு அதிரடி மெமரி உத்தி (Memory Strategy) தான்! என்னன்னு பார்ப்போம்.
இப்போ உலகத்துல AI (செயற்கை நுண்ணறிவு)-க்கான மோகம் ரொம்பவே அதிகமாயிடுச்சு. எல்லா பெரிய டெக் கம்பெனிகளும் அவங்களுடைய AI டேட்டா சென்டர்களை பில்ட் பண்றாங்க.
இந்த டேட்டா சென்டர்களுக்கு, அதிக ஆற்றல் கொண்ட RAM மற்றும் மெமரி சிப்கள் (குறிப்பாக HBM) ரொம்ப அதிகமா தேவைப்படுது.
இந்த சிப்களை அதிகமா தயாரிக்கிற கம்பெனிகள்ல Samsung மற்றும் SK Hynix தான் உலகளவில் டாப்ல இருக்காங்க. அவங்களுடைய உற்பத்தியை AI சிப்களுக்காக அதிகமா திருப்பிட்டாங்க.
இதனால, ஸ்மார்ட்போன்கள்ல பயன்படுத்தப்படும் சாதாரண DRAM மெமரி சிப்களின் விலை தாறுமாறா எகிறிடுச்சு!
Samsung-ன் மெமரி டிவிஷன் (DS Division), இப்போ அதிக லாபம் பார்க்குறதுல ரொம்ப உறுதியா இருக்கு!
ஒரு முக்கியமான தகவல் என்னன்னா, Samsung தன்னுடைய சொந்த மொபைல் டிவிஷனுக்கே (TM Roh தலைமையிலான MX Division), இனிமேல் நீண்ட கால விலை ஒப்பந்தங்களை (Long-Term Agreements) கொடுக்க மறுத்துவிட்டதாம்!
பதிலுக்கு, மூன்று மாதத்துக்கு ஒருமுறை மார்க்கெட் விலைக்கு ஏற்ற மாதிரி புது ஒப்பந்தம் போட்டுக்கலாம்னு சொல்லிட்டாங்களாம்! இது, Samsung-ன் சொந்த போன்களான Galaxy S26 சீரிஸின் விலையையும் பாதிக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது!
Apple நிறுவனம் தன்னுடைய iPhone மற்றும் Mac-களுக்குத் தேவையான பெரும்பாலான மெமரி சிப்களை Samsung மற்றும் SK Hynix-இடம் இருந்துதான் வாங்குறாங்க.
Apple வழக்கமாக, விலைகள் திடீர்னு ஏறுனாலும் அவங்களைத் பாதிக்காத மாதிரி, நீண்ட கால ஒப்பந்தங்களைப் போடுவாங்க.
ஆனா, இப்போ அந்த ஒப்பந்தங்கள் ஜனவரி 2026-ல் முடிவுக்கு வரப் போகுது!
Samsung தன்னுடைய சொந்த டிவிஷனுக்கே விலை சலுகை கொடுக்க மறுக்கும்போது, வெளியில இருக்குற Apple-க்கு மட்டும் சாதகமான விலையை கொடுப்பாங்களா?
நிச்சயம் இல்லை!
இதனால, 2026-ல் வரப்போகும் iPhone 18 சீரிஸின் உற்பத்திச் செலவு (Cost of Production) ரொம்பவே அதிகமாயிடும்! இந்த கூடுதல் செலவை Apple ஒன்னு தன்னுடைய லாபத்தைக் குறைச்சு ஈடுகட்டணும், இல்லன்னா iPhone-ன் சில்லறை விற்பனை விலையை (Retail Price) உயர்த்தணும்!
இப்போ இருக்குற மார்க்கெட் நிலவரப்படி, iPhone 18, iPhone 18 Pro போன்ற மாடல்களின் விலை உயருறதுக்கான வாய்ப்புகள் தான் ரொம்ப அதிகமா இருக்குன்னு சொல்லலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
iPhone 18 Series Pricing Could Remain Unchanged Despite Rising Memory Costs, Analyst Claims
PS Plus Monthly Games for February Announced: Undisputed, Subnautica: Below Zero, Ultros and Ace Combat 7