இந்தியாவில் இன்று அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் 'எல்.ஜி W30'!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 26 ஜூன் 2019 11:27 IST
ஹைலைட்ஸ்
  • இன்னும் இந்த ஸ்மார்ட்போன் எங்கும் அறிமுகமாகவில்லை
  • எல்.ஜி W30 குறித்து டீசர்களை வெளியிட்டுள்ளது அமேசான்
  • அமேசான் அரோரா கிரீன் எல்.ஜி W30-யின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது

அமேசான் நிறுவனம் எல்.ஜி W30 ஸ்மார்ட்போனின் வருகையை உறுதி செய்துள்ளது

எல்.ஜி நிறவனம், இந்தியாவின் புது டெல்லியில் இன்று நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அமேசான் நிறுவனம், இந்த தகவலை இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்வில் எல்.ஜி W-தொடரின் 'எல்.ஜி W30' ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியான ஆண்ட்ராய்ட் நிறுவன விவரப்புத்தக்கத்தில் இடம் பெற்றிருந்தது. மேலும், இந்த தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் ஜாம்பவான் நிறுவனம், இந்த நிகழ்வில் 3 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், 3வது ஸ்மார்ட்போன் 'எல்.ஜி W20'-யாக இருக்கலாம்.

இந்த எல்.ஜி W-தொடர் அறிமுக நிகழ்வு, இந்தியாவின் புது டெல்லியில் ஜூலை 26-ஆன இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. எல்.ஜி நிறுவனம் வெளியிட்டிருந்த டீசரில் இந்த ஸ்மார்ட்போண் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். போர்ட்ரைட், போக்கே, நைட் மோட் மற்றும் வைட்-ஆங்கிள் என பல வசதிகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள். கருப்பு (Black), நீலம் (Blue), மற்றும் பச்சை (Green) என மூன்று அட்டகாசமான வண்ணங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன், நாட்ச் திரை கொண்டு வெளியாகும் என எல்.ஜி நிறுவனம் முன்னதாகவே அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி, இந்த W-தொடர் ஸ்மார்ட்போன்களின் விலை, சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் போட்டிபோடும் வகையில் அமைந்திருக்கும் எனவும் இந்த நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. 

அமேசான் மற்றும் எல்.ஜி ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்தை பற்றி டீசர்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. மேலும், அரோரா கிரீன் (Aurora Green) வண்ணத்திலான இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 'அமேசான் ப்ரைம் டே 2019' விற்பனையில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் எல்.ஜி W10 பற்றிய தகவல்கள் ஆண்ட்ராய்ட் நிறுவன விவரப்புத்தக்கத்தில் இடம் பெற்றிருந்தது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு, 6.2-இன்ச் திரை, 3GB RAM, 32GB சேமிப்பு அளவு, மேலும் மிக முக்கியமாக NFC இணைப்பு வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.