எல்.ஜி நிறவனம், இந்தியாவின் புது டெல்லியில் இன்று நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அமேசான் நிறுவனம், இந்த தகவலை இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்வில் எல்.ஜி W-தொடரின் 'எல்.ஜி W30' ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியான ஆண்ட்ராய்ட் நிறுவன விவரப்புத்தக்கத்தில் இடம் பெற்றிருந்தது. மேலும், இந்த தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் ஜாம்பவான் நிறுவனம், இந்த நிகழ்வில் 3 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், 3வது ஸ்மார்ட்போன் 'எல்.ஜி W20'-யாக இருக்கலாம்.
இந்த எல்.ஜி W-தொடர் அறிமுக நிகழ்வு, இந்தியாவின் புது டெல்லியில் ஜூலை 26-ஆன இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. எல்.ஜி நிறுவனம் வெளியிட்டிருந்த டீசரில் இந்த ஸ்மார்ட்போண் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். போர்ட்ரைட், போக்கே, நைட் மோட் மற்றும் வைட்-ஆங்கிள் என பல வசதிகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள். கருப்பு (Black), நீலம் (Blue), மற்றும் பச்சை (Green) என மூன்று அட்டகாசமான வண்ணங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்போன், நாட்ச் திரை கொண்டு வெளியாகும் என எல்.ஜி நிறுவனம் முன்னதாகவே அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி, இந்த W-தொடர் ஸ்மார்ட்போன்களின் விலை, சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் போட்டிபோடும் வகையில் அமைந்திருக்கும் எனவும் இந்த நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
அமேசான் மற்றும் எல்.ஜி ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்தை பற்றி டீசர்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. மேலும், அரோரா கிரீன் (Aurora Green) வண்ணத்திலான இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 'அமேசான் ப்ரைம் டே 2019' விற்பனையில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் எல்.ஜி W10 பற்றிய தகவல்கள் ஆண்ட்ராய்ட் நிறுவன விவரப்புத்தக்கத்தில் இடம் பெற்றிருந்தது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு, 6.2-இன்ச் திரை, 3GB RAM, 32GB சேமிப்பு அளவு, மேலும் மிக முக்கியமாக NFC இணைப்பு வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்