LG செவ்வாயன்று தனது K சீரிஸில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது - LG K61, LG K51S மற்றும் LG K41S. மூன்று போன்களிலும் குவாட் கேமரா அமைப்புகள், 6.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 4,000mAh பேட்டரி ஆகியவை உள்ளன.
LG K61, LG K51S மற்றும் LG K41S ஆகியவற்றின் விலைகள் வெளியிடப்படவில்லை, ஆனால் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் போன்கள் எப்போதாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போன்களைப் பெறும் முதல் சந்தை அமெரிக்காவாக இருக்கும், அதைத் தொடர்ந்து ஐரோப்பா மற்றும் ஆசியாவின் முக்கிய சந்தைகள் உள்ளன. LG K61, டைட்டானியம், வெள்ளை மற்றும் நீல கலர் ஆப்ஷன்களில் வர பட்டியலிடப்பட்டுள்ளது, LG K51S, டைட்டானியம், பிங்க் மற்றும் நீலம் ஆப்ஷன்களில் வரும், அதே சமயம் LG K41S, டைட்டானியம், கருப்பு மற்றும் வெள்ளை கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்.
LG K61 19.5:9 விகிதத்துடன் 6.5 அங்குல முழு எச்டி + டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் இது 2.3GHz ஆக்டா கோர் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி இண்டர்னல் ஸோரேஜ் ஆப்ஷனுடன் பேக் செய்கிறது. ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கு (2TB வரை) மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. LG K61-ன் பின்புறத்தில் உள்ள குவாட் கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் சூப்பர் வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் depth கொண்ட கேமரா ஆகியவை அடங்கும். போனின் முன்புறத்தில், 16 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது.
மற்ற விவரக்குறிப்புகளில், LG K61-க்குள் 4,000mAh பேட்டரி உள்ளது, மேலும் இணைப்பு விருப்பங்களில் LTE, NFC, Bluetooth v5, dual-band Wi-Fi மற்றும் பல உள்ளன. இந்த போன் 164.5x77.5x8.4mm அளவீட்டைக் கொண்டுள்லது, மேலும் இது கூகுள் லென்ஸ், கூகுள் அசிஸ்டென்ட் பொத்தான், பின்புற கைரேகை சென்சார் போன்ற அம்சங்களுடன் வருகிறது. LG K61-யும் MIL-STD 810G இணக்கமானது.
LG K51S, 20:9 விகிதத்துடன் 6.5 அங்குல எச்டி + டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் பெயரிடப்படாத 2.3GHz ஆக்டா கோர் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. போர்டில் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழியாக (2TB வரை) ஸ்டோரேஜ் விரிவாக்கமும் துணைபுரிகிறது. LG K51S-ன் குவாட் கேமரா அமைப்பில் 32 மெகாபிக்சல் பிரதான கேமரா, 5 மெகாபிக்சல் சூப்பர் வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் depth சென்சார் ஆகியவை அடங்கும். போனின் முன்புறத்தில், 13 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் இடம்பெற்றுள்ளது.
LG K61-ஐப் போலவே, LG K51S-ம் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு விருப்பங்களில் Bluetooth v5, NFC, USB Type-C port, LTE மற்றும் Wi-Fi ஆகியவை அடங்கும். இந்த போன் 165.2x76.7x8.2mm அளவீட்டைக் கொண்டுள்ளது மற்றும் பிற அம்சங்களில் பின்புற கைரேகை சென்சார், Google Assistant button, Google Lens மற்றும் MIL-STD 810G rating. ஆகியவை அடங்கும்.
LG K41S, 20: 9 விகிதத்துடன் அதே 6.5 இன்ச் எச்டி + டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 2.0GHz ஆக்டா கோர் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் 3 ஜிபி ரேம் பேக் செய்கிறது. 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, ஆனால் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் (2 டிபி வரை) உள்ளது.
குவாட் கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 5 மெகாபிக்சல் சூப்பர் வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் depth சென்சார் உள்ளது. முன்புறத்தில், LG K51S-ஐப் போலவே 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. LG K41S-ம், 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது, LG K51S போன்ற இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது, மேலும் 165.7x76.4x8.2mm அளவவீட்டைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்