எல்.ஜியில் புதிதாக அறிமுகமான ஜி8 திங்க் க்யூ ஸ்மார்ட்போனை இம்மாதம் நடைபெறும் உலக மொபைல் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் இரண்டு பின்புற கேமரா, பின்புறத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்யும் வசதி மற்றும் பல அம்சங்கள் கொண்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி, தனது ஒஎல்இடி டிஸ்பிளே வசதியை ஆடியோ வசதியை மேன்படுத்தும் வகையில் ஆடியோ ஆம்பளி ஃப்யர் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அப்டேட் மூலம் போனில் பிளே செய்யப்படும் சப்தங்கள் கீழ்புறம் வழியாகவே வரும் வகையில் இந்த அப்டேட் வந்துள்ளது.
எல்ஜி டிவிகளில் வெளியாகி வந்த இம்மாதரியான கேட்கும் வசதி தற்போது எல்ஜி போன்களில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்ஜி ஜி8 திங்க் க்யூ போன் மூலம் இரண்டு சேனல் கொண்ட ஆடியோ முறையை மெரீடியன் ஆடியோ டெக் தயாராகி வருகிறது.
மேலும் வந்துள்ள தகவல் படி 3,400mAh பேட்டரி பவர், 6.1 இஞ்ச் திரை மற்றும் குவால்கம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸ்ஸருடன் வெளியாகுகிறது. இப்படி பல அம்சங்களுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் ரூபாய்க்கு 64,300 க்கு விற்பனை செய்யப்படும் என்னும் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி பார்சிலோனாவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்