டிசம்.18 ஆம் தேதி வெளியாகுமென்று சமூக வலைதளத்தில் அந்நிறுவத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார்
லெனோவா Z5s-ன் டீசர் போஸ்டரை விபி சாங் செங் வெளியிட்டுள்ளார்.
லெனோவா Z5s ப்ரோ கடந்த மாதம் அறிமுகமானதை தொடர்ந்து லெனோவா Z5s சீனாவில் அறிமுகமாவதை அதன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை விபி சாங் செங் வெபோ தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
முதலில் டிசம்.6 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது டிசம்.18 ஆம் தேதி வெளியாகுமென்று சமூக வலைதளத்தில் அந்நிறுவத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார்.
வெபோவில் செங் இரு போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். இரண்டிலும் லெனோவா Z5s டிசம்.18 ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று கேமராக்களை போஸ்டர் உறுதி செய்துள்ளது.
![]()
TENAA ஆண்ட்ராய்டு கமியூனிட்டி தொடக்கத்தில் லெனோவா L78071ல் மூன்று கேமராக்கள் இருக்கும் என்ற தகவலை வெளியிட்டது. பின்னர், லெனோவா Z5sதான் லெனோவா L78071 என்று லெனோவா நிறுவனம் அறிவித்தது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உள்ளது. 156.7*74.5*7.8mm என்ற அளவில் கேமரா அமைந்துள்ளது. இதன் பின்புறம் மெட்டலால் ஆனது. அதோடு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch Ultra 2 Launch Timeline Leaked; Could Debut Alongside Samsung Galaxy Watch 9