லெனோவா தரப்பில் புதிதாக லெனோவா லீஜியன் என்ற ஸ்மார்ட்போன் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் சீனாவில் அறிமுகமாக உள்ளது.
ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமான லெனோவா அண்மைக் காலமாக சத்தமே இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது கலக்கலான 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரித்துள்ளது. இதன் பெயர் லெனோவா லீஜியன் ஆகும். இம்மாத இறுதியில் சீனாவில் லெனோவா லீஜியன் ப்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது இந்த போன்.
இந்த ஸ்மார்ட்போனின் அம்சமே அதன் செஃல்பி கேமராதான். ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக புதுப்புது டிசைன்களில் செல்ஃபி கேமராவை அமைத்து வருகிறார்கள். சாதாரணமாக முன்பக்கத்தில் ஓரத்தில் மட்டும் இருந்த கேமரா நடுமையத்தில் வந்தது. பின்பு, பாப்-அப் கேமராவாக உருவானது.
அந்த வகையில், லெனோவா லீஜியன் ஸ்மார்ட்போனில் செல்ஃபி கேமரா பாப்-அப் கேமராவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளதுதான் சிறப்பு. இவ்வாறு பக்கவாட்டில் செஃல்பி கேமரா வைக்கப்படும் போது, பயன்பாட்டுக்கு எப்படி சாத்தியம் என்பது விரைவில் தெரியவரும்.
மேலும், லெனோவா லீஜியன் ஸ்மார்ட்போனில் அடிப்படையாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.65 இன்ச் திரை, ஸ்நாப்டிராகன் 865+ SoC பிராசசர் உள்ளது. ஆண்ட்ராய்டு தளங்களில் இது பவர்ஃபுல் பிராசசர் ஆகும். டூயல் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. கேமர்களுக்கு ஏற்றவகையில், கிடைமட்டமாக UI கவனம் செலுத்ப்பட்டுள்ளது. இது அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 3 மற்றும் நுபியா ரெட் மேஜிக் 5S ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக அமைகிறது. பேட்டரியாக இதில் 2,500mAH கொண்ட இரண்டு அதாவது டூயல் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.
லெனோவா லீஜியன் போன் டூயல் ஸ்மார்ட்போனில் 64 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, அத்துடன் 16MP 120 டிகிரி வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. 20 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதன் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இம்மாத இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அப்போது இதன் விலை என்னவாக இருக்கும் என்பது தெரியவரும்.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்