Lenovo K10 Plus ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் AI-ஆதரவு கொண்ட செல்ஃபி கேமராவும் உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, ‘லெனோவா K10 பிளஸ்’ மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
‘Lenovo K10 Plus' இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீன நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான K10 பிளஸ், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. மற்ற லெனோவா போன்களைப் போலவே, K10 பிளஸ் ஆண்ட்ராய்டு பைய் அடிப்படையிலான ZUI ஐ கொண்டது.
இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன. மேலும், வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே உச்சநிலையைக் கொண்டுள்ளது. லெனோவா K10 பிளஸ் (artificial intelligence) செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயங்கும் கேமரா மற்றும் விரைவான சார்ஜிங் வசதி ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கியது. ‘லெனொவா கே 10 பிளஸ்' இந்தியாவில் விற்க ஃபிளிப்கார்ட் நிறுவனம் தயாராக உள்ளது.
இந்தியாவில் லெனோவா K10 பிளஸ் விலை:
இந்தியாவில், ‘லெனோவா K10 பிளஸ்' 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகையின் விலை ரூ.10,999. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் ஸ்ப்ரைட் வண்ணங்களில் வெளிவருகிறது. ஃபிளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன்' நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 30 ஆம் தேதி, மதியம் 12 மணிக்கு ஆன்லைன் சந்தை வழியாக விற்பனைக்கு வருகிறது.
லெனோவா கே 10 பிளஸ் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்:
இரட்டை சிம் கொண்ட ‘லெனோவா K10 பிளஸ்' ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருளுடன் இயங்குகிறது. இதன் டிஸ்ப்ளே 19:9 விகிதத்துடன் 6.22-inch HD+ (720x1520 pixels) கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் ஒரு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 SoC-ஆல் இயக்கப்படுகிறது. இது அட்ரினோ 506 ஜி.பீ.யூ மற்றும் 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, ‘லெனோவா K10 பிளஸ்' மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது, 13 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் எஃப் / 2.0 லென்ஸுடனும், 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சாருடன் வைடு லென்ஸுடனும், 5 மெகாபிக்சல் கொண்ட மூன்றாம் நிலை சென்சாருடன் டீப் சென்சிங்கை கொண்டது.
இந்த ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் AI-ஆதரவு கொண்ட செல்ஃபி கேமராவும் உள்ளது. இது எட்டு வெவ்வேறு காட்சிகளை அடையாளம் காணவும், அழகு வழிமுறையைப் பயன்படுத்தி செல்ஃபிகளை மேம்படுத்தவும் பயன்படுகிறது.
‘லெனோவா K10 பிளஸ்' 64 ஜிபி உள் சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (2 டிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியது. ஸ்மாட்போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, and USB Type-C port ஆகியவை அடங்கும். accelerometer, ambient light, fingerprint sensor, and proximity sensor போன்ற சென்சார்கள் உள்ளன.
லெனோவா K10 பிளஸில் 4,050 mAh பேட்டரி மூலம் பவரூட்டப்பட்டுள்ளது. இது 10W விரைவான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது தவிர,ஸ்மார்ட்போன் 158.26x75.77x8.3 mm மற்றும் 172 gram எடை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26 Series to Offer Built-In Support for Company's 25W Magnetic Qi2 Charger: Report
Airtel Discontinues Two Prepaid Recharge Packs in India With Data Benefits, Free Airtel Xtreme Play Subscription
Samsung Galaxy Phones, Devices Are Now Available via Instamart With 10-Minute Instant Delivery