Photo Credit: Weibo/ Chang Cheng
உலகத்தின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களான ஹூவாய், எல்ஜி, சியோமி, ஹெச்எம்டி குளோபல், மைக்ரோசாப்ட் மற்றும் ஓப்போ போன்ற நிறுவனங்கள் ‘உலக மொபைல் காங்கிரஸ் 2019' கூட்டத்தில் பங்கேற்கபோவதாக உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது லெனோவோ குழுமத்தின் துணை தலைவரான சாங்க் செங்க் தனது நிறுவனமும் இந்த நான்கு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த ‘உலக மொபைல் காங்கிரஸ் 2019 கூட்டதில்' லெனோவோ Z6 ப்ரோ அறிமுகபடுத்தப்படும் என எதிர்பார்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான லெனோவோ Z5 ஸ்மார்ட்போனுக்கு பின் அறிமுகமாகிறது.
இந்த போனை பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில் Z6 ப்ரோ ஸ்மார்ட்போன் புதிய கேமாரக்கள் மற்றும் வடிவங்களை பெரும் என எதிர்பார்கப்படுகிறது.
போஸ்டரில் இருக்கும் தகவல் படி 'இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட்' சென்சார் கொண்டிருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
முந்தைய போன் வெளியிட்டின் போது அதிகப்படியான மார்கெட்டிங் செய்து போனில் குறைவான அம்சங்களே காணப்பட்டது. அதனால் தற்போது வரை Z6 ப்ரோ போனின் எவ்வித தகவல்களும் இன்னும் வெளியாகாத நிலையில் உலக மொபைல் காங்கிரஸ்காக பலரும் எதிர்பார்பை கிளப்பிவிட்டனர்.
மேலும் இப்படி குறைந்த தகவல்களே இதுவரை கசிந்துள்ளதால் பார்சிலோனாவில் இருக்கும் லெனோவோ ஸ்டாலில் கூட்டத்தை எதிர்பார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்