Lava Agni 3 என்கிற சக்தி வாய்ந்த அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது LAVA நிறுவனம்
Photo Credit: Lava
Lava Agni 3 has a 1.74-inch AMOLED rear touch screen display
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Lava Agni 3 செல்போன் பற்றி தான்.
Lava Agni 3 5G இந்தியாவில் அறிமுகமானது. 50 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்புடன் இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என தெரிகிறது. MediaTek Dimensity 7300 SoC சிப் மூலம் இயக்கப்படும். இதற்கு முன்பு லாவா நிறுவனம் அறிமுகம் செய்த Lava Agni 2 ஸ்மார்ட்போனில் இருந்து இது எப்படி மேம்பாடுள்ளது என்பது போன்ற விபரங்களை அடுத்து பார்க்கலாம்.
Lava Agni 3 5G இ இந்தியாவில் சார்ஜிங் அடாப்டர் இல்லாமல் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி அடிப்படை மாடல் ரூபாய் 20,999 என்கிற விலையில் கிடைக்கிறது. அதுவே சார்ஜருடன் கிடைக்கிறது 22,999 விலையில் கிடைக்கிறது. 256ஜிபி மெமரி மாடல் சார்ஜர் உடன் சேர்ந்து 24,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு Amazon வழியாக விற்பனைக்கு வரும் . இது Heather Glass மற்றும் Pristine Glass வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
Lava Agni 3 ஸ்மார்ட்போனில் நாம் 6.78" இன்ச் அளவு கொண்ட முழு HD+ டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம். இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வெளிவர வாய்ப்புள்ளதென்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது சிறிய டிஸ்பிளே ரியர் பேனலில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில் Lava Agni 3 சாதனம் குவாட் ரியர் கேமரா அமைப்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
64MP + 8MP + 2MP + 2MP கேமரா சென்சார்களை அடக்கியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் உள்ளது.
மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8GB ரேம் உடன் 256GB ஸ்டோரேஜ் வரை இடம்பெற வாய்ப்பு அதிகம். குறிப்பாக, ரேம் பூஸ்ட் ஆதரவுடன் இந்த சாதனம் 16GB ரேம் சேவையை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போன் 4700mAh உடன் 66W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெறும். அதிகம் எதிர்பார்க்கப்படும் Lava Agni 3 ஸ்மார்ட்போன் சாதனமானது ஆண்ட்ராய்டு 14 உடன் லாவா சாப்ட்வேர் உடன் வெளிவருமென்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைக்கு இரண்டு கலர் விருப்பங்களில் செல்போன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்புற பேனலின் மேல் இடது மூலையில் சதுர வடிவ கேமரா யூனிட் உள்ளது. Lava Agni 3 5G செல்போனின் கேமரா பகுதி மீது '50MP OIS' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 1TB வரை மெமரி கார்டை பயன்படுத்தி செல்போன் மெமரியை அதிகரித்துக்கொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features