Photo Credit: Lava
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Lava Agni 3 5G செல்போன் பற்றி தான்.
Lava Agni 3 5G செல்போன் அம்சங்களை அதன் வடிவமைப்பு மற்றும் கேமராக்கள் பற்றி பலவிதமான தகவல் வந்துள்ளது. இருந்தாலும் லாவா இன்டர்நேஷனல் தயாரிப்புத் தலைவர் சுமித் சிங் நமது Gadgets360க்கு பிரத்யேகமாக சில தகவல்களை தெரிவித்துள்ளார். வரவிருக்கும் Lava Agni 3 5G இந்தியாவில் ரூ.30,000 விலையில் இருக்கும் என்று சுமித் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். நடுத்தர மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் என்றும், தனித்து நிற்கும் வகையில் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டு வரும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
Lava Agni 3 5G அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்புடன் இரண்டு வண்ண விருப்பங்களி
ல் வரும் என தெரிகிறது. MediaTek Dimensity 7300 SoC சிப் மூலம் இயக்கப்படும்.
Lava Agni 3 ஸ்மார்ட்போனில் நாம் 6.78" இன்ச் அளவு கொண்ட முழு HD+ டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம். இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வெளிவர வாய்ப்புள்ளதென்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது சிறிய டிஸ்பிளே ரியர் பேனலில் 1.74-இன்ச் AMOLED திரையாக இருக்கும். கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில் Lava Agni 3 சாதனம் குவாட் ரியர் கேமரா அமைப்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 64MP + 8MP + 2MP + 2MP கேமரா சென்சார்களை அடக்கியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் உள்ளது.
மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8GB ரேம் உடன் 256GB ஸ்டோரேஜ் வரை இடம்பெற வாய்ப்பு அதிகம். குறிப்பாக, ரேம் பூஸ்ட் ஆதரவுடன் இந்த சாதனம் 16GB ரேம் சேவையை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போன் 4700mAh உடன் 66W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெரும். அதிகம் எதிர்பார்க்கப்படும் Lava Agni 3 ஸ்மார்ட்போன் சாதனமானது ஆண்ட்ராய்டு 14 உடன் லாவா சாப்ட்வேர் உடன் வெளிவருமென்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனமாக அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என சுமித் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
லாவா அக்னி 3 வெளியீடு அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் மதியம் 12 மணிக்கு இந்திய அளவில் நடைபெறும். வெளியீட்டு நிகழ்வு YouTubeல் நேரடியாக ஒளிபரப்பப்படும். இது குறித்து லாவா நிறுவனத்தால் பகிரப்பட்ட டீஸர் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்