இந்தியாவில் ரியல்மி C12 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
ரியல்மி C12 ஸ்மார்ட்போனில் ட்ரிப்பிள் கேமரா அம்சம் உள்ளது
ரியல்மி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த ரியல்மி C12 ஸ்மார்ட்போன் முதன்முதலாக இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ரியல்மி C11 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக ரியல்மி C12 அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் வாட்டர்டிராப் ஸ்டைல் நாட்ச், ட்ரிப்பிள் கேமரா, ஆக்டாகோர் பிராசசர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்தியாவில் ரியல்மி C12 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று ஆகஸ்ட் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.
ரியல்மி C12 ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், ஃபிளிப்கார்ட், ரியல்மி ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் ரியல்மி பட்ஸ் கிளாசிக் இயர்போனின் விற்பனையும் ஆரம்பமாகிறது.
இந்தியாவில் ரியல்மி C12 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பவர் ப்ளு, பவர் சில்வர் என இரண்டு நிறங்களில் ரியல்மி C12 கிடைக்கிறது.
ரியல்மி C12 ஸ்மார்ட்போனுடன் கூடுதலாக, ரியல்மி பட்ஸ் கிளாசிக் இயர்போனும் விற்கப்படுகிறது. இதன் விலை 399 ரூபாய் ஆகும்.
ரியல்மி C12 மற்றம் ரியல்மி பட்ஸ் கிளாசிக் இரண்டுமே கடந்த வாரம் ரியல்மி C15 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றில் ரியல்மி C15 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10, ரியல்மி UI
திரை அளவு: 6.5 இன்ச்
பிராசசர்: மீடியாடெக் ஹீலியோ G35 SoC
கேமரா:
பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா உள்ளன.
13MP பிரைமரி கேமரா, 2 MP மோனோகுரோம் சென்சார் கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் கேமரா.
முன்பக்கத்தில் 5 மெகா பிக்சலுடன் செல்பி கேமரா உள்ளது.
பேட்டரி சக்தி: 6,000mAh
கூடுதல் சிறப்பம்சங்கள்: 64ஜிபி மெமரி, 256 ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெமரி, 4ஜி வோலட், வைஃபை, ப்ளூடூத் V5.0, ஜிபிஎஸ், மைக்ரோ USB, விரல் ரேகை சென்சார், 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Game Awards' Mystery Statue Reportedly Relates to New Divinity Game From Larian Studios
Samsung Galaxy S26 Ultra Reportedly Listed on US FCC Website With Flagship Snapdragon Chipset
Facebook App Update Brings Redesigned Feed, Search, Navigation Interfaces Alongside New Search Algorithm