Photo Credit: itel
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Itel A50 செல்போன் பற்றி தான்.
இந்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ஐடெல் itel A50 Series போன்கள் வெளியாக இருக்கின்றது. itel A50 மற்றும் itel A50C ஆகிய 2 மாடல்கள் வர வாய்ப்புள்ளது. இந்த போன்கள் ரூ.7000 பட்ஜெட்டில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Unisoc T603 SoC, 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி உள்ளிட்ட வசதிகளுடன் வரும் இந்த செல்போன் ஏற்கனவே உலகளாவிய சந்தைகளில் கிடைக்கிறது. Itel A50 ஆனது Itel A70 செல்போனின் அடுத்த மாடலாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Itel A70 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட போது 4GB ரேம், 64GB மெமரி மாடல் ரூ. 6,299. 4GB ரேம், 128GB மெமரி மாடல் ரூ. 6.799 மற்றும் 4GB ரேம் 256GB மெமரி மாடல் ரூ. 7,299 என்ற விலையிலும் அறிமுகம் ஆனது. Itel A50 மாடலும் இதே விலை ரேஞ்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Itel A50 செல்போனில் 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த பிராண்ட் வாங்குபவர்களுக்கு ஒரு முறை இலவசமாக டிஸ்பிளே மாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. செல்போன் வாங்கிய 100 நாட்களுக்குள் இந்த சலுகை செல்லுபடியாகும். itel A70போன்ற மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களிலும் இந்த சலுகை உள்ளது.
கேமராவை பொறுத்தவரையில் முன் கேமரா 8MP சென்சார் மற்றும் பின்புற கேமரா அமைப்பில் 13MP பிரதான சென்சார் மற்றும் 0.08MP இரண்டாம் நிலை சென்சார் கேமராவை கொண்டுள்ளது. இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி மெமரி மாடல்களில் கிடைக்கிறது. சியான் ப்ளூ, லைம் கிரீன், மிஸ்டி பிளாக் மற்றும் ஷிம்மர் கோல்டு வண்ணங்களில் இருக்கிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
5,000mAh பேட்டரி ஃபோனை இயங்க வைக்கிறது. 10W சார்ஜர் உள்ளது. இது USB-C போர்ட், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், GPS மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ரீடர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டைனாமிக் பார் பீச்சர் மூலம் பேட்டரி மற்றும் கால் நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். 2 டிபிக்கான microSD கார்டு சப்போர்ட் உள்ளது. இந்த பட்ஜெட்டிலும் Android 14 Go Edition மூலம் இயங்கும் வசதி தரப்பட்டுள்ளது.
பேட்டரி உடன் சேர்த்து செல்போன் 8.7 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. 8 எம்பி கொண்ட மெயின் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கேமராவுடன் வருகிறது. பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வசதியுடனும் வருகிறது. இதுவொரு 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்இடி கனெக்டிவிட்டி வருகிறது. ப்ளூடூத், வை-பை மற்றும் ஜிபிஎஸ் சப்போர்ட் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்