iQoo Z9s 5G மற்றும் iQoo Z9s Pro 5G ஆகிய செல்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 21 அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo Credit: Gadgets 360
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது iQoo Z9s 5G மற்றும் iQoo Z9s Pro 5G செல்போன்கள்.
விவோவின் துணை நிறுவனமான iQoo கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென்3 சிப்செட்டுடன் கூடிய iQoo Z9 Turbo மொபைலை அறிமுகப்படுத்தியது. இந்த மொபைலை வரும் செப்டம்பர் இறுதிக்குள் உலகளவில் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்போது iQoo Z9s 5G மற்றும் iQoo Z9s Pro 5G ஆகிய செல்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 21 அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
iQoo Z9s 5G ஆனது Snapdragon 7 Gen 3 SoC சிப்செட் மூலம் இயங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் iQoo Z9s 5G ஆனது MediaTek Dimensity 7300 சிப்பைக் கொண்டிருக்கும். இந்த இரண்டு செல்போன்களும் விவோவின் இந்திய ஆலையான கிரேட்டர் நொய்டா அருகே உள்ள கம்பெனியில் உற்பத்தி செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளம் வழியாக விற்பனைக்கு வர இருக்கிறது.
iQoo Z9s Pro 5G மற்றும் iQoo Z9s 5G ஆகியவை ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் சூப்பர் நைட் வசதியுடன் 50 மெகாபிக்சல் Sony IMX882 சென்சார் கேமராவுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது OIS உடன் 4K வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. கேமரா அமைப்பு AI டெலிட் மற்றும் AI புகைப்பட மேம்படு அம்சங்களை வழங்கும். iQoo Z9s Pro 5G மாடலில் கூடுதலாக 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. அவை Flamboyant Orange மற்றும் Luxe Marble ஃபினிஷ்களில் கிடைக்கும்.
மேலும், iQoo Z9s செல்போன் தொடரில் 7.49mm தடிமன் கொண்ட 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே இருக்கும். வெண்ணிலா மாடலின் திரை 1,800நிட்ஸ் பிரகாசத்தை வழங்கும். அதே சமயம் iQoo Z9s Pro 5G ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்தையும் 4,500nits பிரகாசத்தையும் கொண்டிருக்கும். 5,500mAh பேட்டரி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட iQoo Z9 Turbo மொபைலானது 6,000mAh பேட்டரி மற்றும் 80W வயர்டு சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டிருந்தது. இரண்டு மாடல்களும் இந்தியாவில் 25 ஆயிரம் ரூபாய் என்ற விலை ரேஞ்சில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வைஃபை, என்எப்சி, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி சப்போர்ட் செய்கிறது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியும் கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. இந்த செல்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது iQoo நிறுவனம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale