ஐக்யூ நிறுவனம் தனது புதிய 'Z' சீரிஸ் போனை அறிமுகம் செய்யத் தயாராகிவிட்டது. சீனாவில் வெளியாகவுள்ள iQOO Z11 Turbo, உலக சந்தையில் iQOO 15R என்ற பெயரில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: iQOO
iQOO இந்த மாதம் சீனாவில் iQOO Z11 டர்போவை அறிமுகப்படுத்தும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
இன்னைக்கு நம்ம பார்க்கப்போறது ஒரு செம பவர்ஃபுல் போன் பத்திதான். "பெர்ஃபார்மன்ஸ்-னா அது ஐக்யூ தான்"னு சொல்ற அளவுக்கு அந்த நிறுவனம் இப்போ ஒரு புது மான்ஸ்டரை களமிறக்கப் போகுது. அதுதான் iQOO Z11 Turbo. ஜனவரி 15-ம் தேதி சீனாவில் லான்ச் ஆகப்போற இந்த போனோட அத்தனை ரகசியங்களும் இப்போ ஆன்லைன்ல கசிஞ்சிருக்கு. இந்த போனோட இதயம்னு சொல்லப்படுற சிப்செட் Snapdragon 8 Gen 5. இது 3nm தொழில்நுட்பத்துல உருவானது. சமீபத்துல வந்த 'AnTuTu' பெஞ்ச்மார்க் டெஸ்ட்ல இது சுமார் 3.59 மில்லியன் புள்ளிகளை எடுத்து சாதனை படைச்சிருக்கு. அதாவது, ஒன்பிளஸ் (OnePlus) போன்ற பிராண்டுகளுக்கு இது நேரடி சவாலா அமையப்போகுது. இதுல 16GB வரை ரேம் மற்றும் 1TB வரை மெமரி வசதி இருக்கும்னு சொல்றாங்க.
டிஸ்ப்ளே பொறுத்தவரை 6.59 இன்ச் 1.5K LTPS OLED ஸ்கிரீன் இதுல இருக்கு. முக்கியமா கேமர்களுக்கு பிடிச்ச 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்திருக்காங்க. இதோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இதுல Ultrasonic Fingerprint Sensor இருக்கு. பொதுவா ரொம்ப விலை அதிகமான போன்கள்ல இருக்குற இந்த வசதி, இப்போ இந்த பட்ஜெட் போன்லயும் வரப்போகுது. மெட்டல் பிரேம் மற்றும் கிளாஸ் பேக் டிசைன் இந்த போனுக்கு ஒரு செம பிரீமியம் லுக் தருது. "ஏதோ ஒரு கேமரா இருக்கு"ன்னு இல்லாம, இதுல 200MP Samsung HP5 மெயின் சென்சார் கொடுக்கப்போறாங்க. கூடவே ஒரு 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் இருக்கும். செல்ஃபி எடுக்க 32MP கேமரா இருக்கு. போட்டோஸ் மற்றும் வீடியோஸ்ல சியோமி மற்றும் சாம்சங் போன்களுக்கு இது டஃப் கொடுக்கும்னு எதிர்பார்க்கலாம்.
இந்த போனோட 'ரியல் ஹீரோ' இதோட பேட்டரிதான். இதுவரைக்கும் எந்த ஒரு ஸ்லிம் போன்லயும் பார்க்காத 7,600mAh மெகா பேட்டரி இதுல இருக்கு. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் இதோட தடிமன் வெறும் 7.9mm தான். கூடவே 100W அல்லது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கும். ஒரு தடவை சார்ஜ் போட்டா ரெண்டு நாளைக்கு கவலை இல்லை!
இப்போ முக்கியமான விஷயம், இந்த iQOO Z11 Turbo இந்தியாவுக்கு வருமா? சீனாவுல 'Z11 Turbo'ன்னு வர்ற இதே போன், இந்தியா மற்றும் உலக சந்தைகளுக்கு வரும்போது iQOO 15R என்ற பெயரில் ரீபிராண்ட் ஆக வாய்ப்பு அதிகமா இருக்கு. சமீபத்துல 'Bluetooth SIG' சான்றிதழ்ல iQOO 15R என்ற பெயர் தென்பட்டது இதை உறுதிப்படுத்துது.
நீங்க ஒரு ஹெவி கேமரா அல்லது ஒரு நாள் முழுக்க சார்ஜ் நிக்கணும்னு நினைக்கிற யூசரா இருந்தா, இந்த போனுக்காக கண்டிப்பா வெயிட் பண்ணலாம். இதோட விலை சீனாவில் சுமார் 29,000 ரூபாய்க்குத் தொடங்கும்னு எதிர்பார்க்கப்படுது.
இந்தியாவுக்கு வரும்போது இது ரூ. 35,000 - 40,000 பட்ஜெட்ல ஒரு சிறந்த 'Flagship Killer'-ஆ இருக்கும். உங்களுக்கு இந்த போன்ல எந்த விஷயம் ரொம்ப பிடிச்சிருக்கு? அந்த 7600mAh பேட்டரியா இல்ல 200MP கேமராவா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces