6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQoo Z1 5G-ன் விலை 2,198 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,400) ஆகும்.
iQoo Z1 5G ஜூன் 1 முதல் சீனாவில் கிடைக்கும்
விவோவின் துணை பிராண்ட் iQoo, iQoo Z1 5G என்ற மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ சிப்செட் மற்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் மூன்று வகைகளிலும் இரண்டு வண்ணங்களிலும் கிடைக்கும். இப்போதைக்கு, இந்த போன் சீனாவில் விற்பனை செய்யத் தொடங்கும்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQoo Z1 5G-ன் விலை 2,198 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,400) ஆகும். போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை 2,498 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,600) மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை 2,798 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,800) ஆகும். முன்கூட்டிய ஆர்டர்கள் மே 25-ஆம் தேதியும், விற்பனை ஜூன் 1-ந் தேதியும் தொடங்கும்.
டூயல்-சிம் iQoo Z1 5G, iQoo UI உடன் Android 10-ல் இயங்கும். இந்த போனில் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.57 அங்குல FHD + டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே 8 ஜிபி எல்பிடிடிஆர்எக்ஸ் 4 ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜுடன் MediaTek Dimensity 1000+ சிப்செட் உள்ளது.
iQoo Z1 5G பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 4.0, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44W வேகமான சார்ஜிங் உள்ளது. iQoo Z1 5G எடை 194.78 கிராம் ஆகும்.
Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp Starts Warning Users About Chats From Unknown Numbers
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Camera Upgrades Said to Result in Thicker Rear Camera Module, Larger Lenses
Grand Theft Auto 6 Price, Editions Revealed; Pre-Orders Begin at Midnight on June 25