கொஞ்சம் பொறுங்க iQOO Neo 10 செல்போன் சீரியஸ் வந்துரும்

iQOO Neo 10 செல்போன் சீரியஸ் விரைவில் சீனாவில் வெளியிடப்பட உள்ளது

கொஞ்சம் பொறுங்க iQOO Neo 10 செல்போன் சீரியஸ் வந்துரும்

Photo Credit: iQOO

ஹைலைட்ஸ்
  • iQOO Neo 10 சீரியஸ் பேஸ் மற்றும் Pro ஆகிய மாடல்களில் வெளியாகும்
  • 1.5K பிளாட் டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • 6,000mAh பேட்டரியை பெற்றிருக்கும் என தெரிய வருகிறது
விளம்பரம்

iQOO Neo 10 செல்போன் சீரியஸ் விரைவில் சீனாவில் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே இந்த செல்போன் சீரியஸ் பற்றிய விவரங்கள் கடந்த சில வாரங்களாக ஆன்லைனில் வெளியாகி வந்தது. இது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக iQOO நிறுவனத்தின் மூத்த நிர்வாகி அதன் உடனடி வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த செல்போன் சீரியஸில் அடிப்படை iQOO Neo 10 மற்றும் iQOO Neo 10 Pro ஆகிய மாடல் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட  iQOO Neo 9  மற்றும்  iQOO Neo 9 Pro மாடலை போலவே இதுவே வெற்றிகரமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. iQOO டிசம்பர் மாதம் iQOO 13 செல்போன் மாடலை இந்தியாவில் வெளியிட உள்ளது.

iQOO Neo செல்போன் சீரியஸ் வெளியீடு 

iQOO Neo 10 செல்போன் சீரியஸ் பற்றிய தகவல்  iQOO நியோ தயாரிப்பு மேலாளரால் Weibo வலைதள பதிவில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. செல்போன் வெளியீடு விவரம் தவிர வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. iQOO Neo 10 சீரியஸ் நவம்பரில் சீனாவிற்கு வரலாம் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த மாத இறுதியில் அறிமுக விழா நடைபெறலாம் என தெரிகிறது. முறையான வெளியீட்டு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

iQOO Neo 10 பேஸிக் மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 SoC கொண்டிருக்கும் என தெரிகிறது. அதே சமயம் iQOO Neo 10 Pro மாடல் MediaTek Dimensity 9400 சிப்செட்டுடன் வரக்கூடும் என கூறப்படுகிறது. இவை 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு செல்போன் மாடல்களிலும் 6,000mAh பேட்டரிகள் மற்றும் 1.5K பிளாட் டிஸ்ப்ளே இருக்கும் என கூறப்படுகிறது. 
இது தவிர iQOO நியோ 10 சீரிஸ் செல்போன்கள் மெட்டல் மிடில் ஃபிரேமைப் பெறலாம் என்று கூறப்படுகிறது. iQOO Neo 9 சீரியஸ் செல்போன்களில் பிளாஸ்டிக் மிடில் ஃபிரேம் இருந்தது. 

பேஸிக்  iQOO Neo 9 செல்போன் மாடல் Snapdragon 8 Gen 2 SoC சிப்செட் கொண்டுள்ளது. அதே நேரத்தில் iQOO Neo 9 Pro ஆனது MediaTek Dimensity 9300 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இரண்டு செல்போன்களும்  5,160mAh பேட்டரிகள் மூலம் 20W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வெளியானது. 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட்களை கொண்டுள்ளன.

USB டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் கிரில்ஸ் மற்றும் முதன்மை மைக்ரோஃபோன் ஆகியவை கீழே உள்ளன. டிசைன்கள் நல்ல பிடிமானத்தை வழங்குவதோடு மொபைலின் தோற்றத்தை மெருகேற்றுகிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், அகச்சிவப்பு சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ஃபை ஆடியோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. OIS மற்றும் LED ஃபிளாஷ் மற்றும் 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா  சப்போர்ட் இருக்கும் என கூறப்படுகிறது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ரியல்மி 16T 5G விமர்சனம்: மலிவான விலையில் ப்ரோ மாடல் போன்ற தோற்றம்
  2. மோட்டோ ஜி37 பவர் vs ஒப்போ K14x vs சாம்சங் கேலக்ஸி M17 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  3. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ கேமரா விபரங்கள் உறுதி செய்யப்பட்டன; மூன்று வண்ண விருப்பங்களில் வரும்
  4. 55dB ANC, 50 மணிநேர பேட்டரியுடன் ரியல்மி பட்ஸ் ஏர் 8 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்
  5. 1.97-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 20 நாட்கள் பேட்டரியுடன் ரியல்மி வாட்ச் S5 இந்தியாவில் அறிமுகம்
  6. ரியல்மி 16T இந்தியாவில் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8,000mAh பேட்டரியுடன் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  7. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
  8. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விமர்சனம்: கிட்டத்தட்ட ‘ப்ரோ’ தரத்திலான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்
  9. சியோமி ஸ்மார்ட் பேண்ட் 10 ப்ரோ அறிமுகம்: 1.74-இன்ச் AMOLED திரை, 21 நாட்கள் பேட்டரி ஆயுள்
  10. ஒப்போ ஃபைண்ட் X9s, விவோ X300 FE, ஒன்பிளஸ் 15: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »