iQoo 3 5G முதன்மை போன் இறுதியாக வெளியீட்டு தேதியைக் கொண்டுள்ளது. iQoo அதன் வரவிருக்கும் கேமிங் மையப்படுத்தப்பட்ட போன் பிப்ரவரி 25-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. வரவிருக்கும் போனின் வெளியீட்டு தேதி சீன சந்தைக்குத் தெரிகிறது. ஆனால் முந்தைய கசிவுகளை கருத்தில் கொண்டு, iQoo 3 இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். வரவிருக்கும் iQoo ஃப்ளாஷ்க்ரிப் ஏற்கனவே 48 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் திரவ குளிரூட்டும் தொழில்நுட்பத்துடன் குவாட் ரியர் கேமரா அமைப்பைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் இது TENAA மற்றும் கீக்பெஞ்ச் தரவுத்தளத்திலும் காணப்படுகிறது.
அதிகாரப்பூர்வ iQoo Weibo பக்கம், பிப்ரவரி 25-ஆம் தேதி iQoo 3 அறிமுகம் செய்யப்படும் என்றும் நிகழ்வு மதியம் 2:30 (CST) மணிக்கு தொடங்கும் என்றும் ஒரு பதிவு (post) மூலம் பகிர்ந்துள்ளது. நிகழ்வு லைவ்-ஸ்ட்ரீம் செய்யப்படுமா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் அவ்வாறு நடந்தால், அது இந்தியாவில் மதியம் 12 (IST) மணிக்கு தொடங்கும். வெளியீட்டு தேதியைத் தவிர, விவோ துணை நிறுவனம் அதன் வரவிருக்கும் முதன்மை போன் தொடர்பான வேறு எந்த புதிய விவரங்களையும் வழங்கவில்லை.
iQoo சமீபத்தில் ஒரு அதிகாரப்பூர்வ போஸ்டரைப் (official poster) பகிர்ந்து கொண்டது, இது iQoo 3-யில் குவாட் பின்புற கேமராக்களை வெளிப்படுத்தியது, அவற்றில் ஒன்று 48 மெகாபிக்சல் ஸ்னாப்பர் ஆகும். இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படும், இது கீக்பெஞ்ச் பட்டியலின்படி 12 ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு TENAA listing ஒரு iQoo Pro வரிசையில் இருக்கக்கூடும் என்றும் அது 64 மெகாபிக்சல் குவாட் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது என்றும் கூறுகிறது.
மற்ற மூன்று லென்ஸ்கள் ஒரு ஜோடி 13 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றைக் குறிக்கின்றன. IQoo 3 6.44 அங்குல முழு எச்டி + (1080 x 2400 பிக்சல்கள்) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டதாக கூறப்படுகிறது. இது 4,370mAh பேட்டரியைக் பேக் செய்யும் மற்றும் 3C listing-ன் படி 55W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை வழங்கும்.
Is Poco X2 the new best phone under Rs. 20,000? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்