iQOO ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! iQOO 15 நவம்பரில் கன்ஃபார்ம்! மிரட்டலான அம்சங்கள் உள்ளே!

iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த மாதம் அதாவது நவம்பரில் வெளியாகவிருக்கிறது

iQOO ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! iQOO 15 நவம்பரில் கன்ஃபார்ம்! மிரட்டலான அம்சங்கள் உள்ளே!

Photo Credit: iQOO

iQOO 15 இந்தியாவில் நான்கு வண்ணங்களில் கிடைக்கக்கூடும்

ஹைலைட்ஸ்
  • iQOO 15 ஃபோன் நவம்பர் 27 அன்று இந்தியாவில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் இரு
  • OriginOS 6 என்னும் புதிய இயங்குதளம் (OS) இடம்பெறும்
  • Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் மற்றும் சீன மாடலில் 7,000mAh பேட்டரியுட
விளம்பரம்

இந்திய கேமிங் (Gaming) மற்றும் ஃபிளாக்‌ஷிப் (Flagship) ஸ்மார்ட்போன் (Smartphone) மார்க்கெட்-ல (Market) ஒரு பெரிய அலை கிளப்ப, iQOO நிறுவனம் இப்போ ரெடியாகிட்டாங்க! ஆமாம், நம்ம எல்லாரும் ரொம்ப ஆவலோட எதிர்பார்த்த iQOO 15 ஃபோன் இந்தியாவிற்கு வரப்போகுது, அதுவும் அடுத்த மாசம் நவம்பர்ல. iQOO நிறுவனத்தோட CEO நிபுண் மார்யா (Nipun Marya), தன்னோட சோஷியல் மீடியா (Social Media) பக்கத்துல ஒரு ஸ்பின்வீல் (Spinwheel) வீடியோவை ஷேர் (Share) பண்ணி, "iQOO 15 ஃபோன் எந்த தேதியில லான்ச் (Launch) ஆகும்னு யூகிங்க பார்க்கலாம்"னு கேட்டுருக்காரு. அந்த வீல் சுத்தி நிக்கிறத பார்த்தா, நவம்பர் 27 தான் மோஸ்ட் பாசிபிள் (Most Plausible) லான்ச் தேதி-யா இருக்கும்னு சொல்லப்படுது. இது iQOO 13-க்கு அப்புறம் வரப்போகும் சக்சஸர் (Successor) மாடல்.

இந்த லான்ச்-ல iQOO ஒரு பெரிய சர்ப்ரைஸ் (Surprise)-ஆ புதிய OriginOS 6-ஐ அறிமுகப்படுத்தவிருக்காங்க. இந்த OS (Operating System) ஆண்ட்ராய்டு 16 (Android 16) அடிப்படையில உருவாக்கப்பட்டிருக்கு. இதுலதான் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கான (Interesting) Dynamic Glow UIங்கிற புதிய டிசைன் லாங்குவேஜ் (Design Language) இருக்கு.
Dynamic Glow UI-ன்னா என்னனு பாத்தீங்கன்னா:

  •  இது நம்ம ஹோம் பேஜ் (Home Page), லாக் ஸ்கிரீன் (Lock Screen), மற்றும் ஆப்ஸ் (Apps)-ஐ ஒரு புது லுக்கிற்கு (Look) மாத்தும்.
  • லைட் க்ளோ (Light Glow) எஃபக்ட்ஸ் (Effects), ரொம்ப ஸ்மூத்தான (Smooth) அனிமேஷன்கள் (Animations) எல்லாமே ஐபோன் (iPhone)-ல இருக்குற "Liquid Glass" டிசைன் மாதிரியே இருக்குனு சொல்றாங்க.
  • இதுல ஆப்பிள் (Apple)-ல இருக்குற Dynamic Island-ஐ இன்ஸ்பயர் (Inspire) பண்ணி உருவாக்கிய Atomic Islandன்னு ஒரு வசதியும் இருக்காம். நோட்டிஃபிகேஷன்கள் (Notifications) எல்லாமே டைனமிக்கா (Dynamically) இதில் வந்து போகும்.
  • ஸ்பெக்ஸ் (Specs) பத்திப் பேசணும்னா
  • iQOO 15 சீனால ஏற்கனவே அறிமுகமாகிடுச்சு. அங்க என்னென்ன அம்சங்கள் இருந்துச்சுனு பார்ப்போம்:
  • இந்த ஃபோன் புதிய 3nm Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்-ல இயங்குது. கேமிங்-கிற்கு (Gaming) இது ஒரு மிரட்டலான சிப்செட்.
  • டிஸ்ப்ளே (Display) - 6.85 இன்ச் Samsung M14 AMOLED டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன் (Resolution) மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) கொண்டது.
  • கேமரா (Camera) - 50 மெகாபிக்ஸல் (Megapixel) திறன் கொண்ட மூன்று கேமரா செட்டப் (Triple Camera Setup).
  • பேட்டரி (Battery) - மிகப்பெரிய 7,000mAh பேட்டரி, கூடவே 100W வயர்டு (Wired) மற்றும் 40W வயர்லெஸ் (Wireless) ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் (Support) இருக்கு.

இவ்வளவு தரமான அம்சங்களோட இந்த ஃபிளாக்‌ஷிப் (Flagship) ஃபோன் நவம்பரில் இந்தியால லான்ச் ஆகுது. இதோட விலை மற்றும் விற்பனை (Sale) விவரங்கள் இன்னும் சில நாட்கள்ல கன்ஃபார்ம் (Confirm) ஆகும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
#சமீபத்திய செய்திகள்
  1. சின்ன ஃபோன் பிரியர்களுக்கு Vivo-வின் சர்ப்ரைஸ்! Vivo S50 Pro Mini-இல் Dimensity 9400 சிப்செட்
  2. HMD-ன் அடுத்த மாடுலர் ஃபோன் ரெடி! கேமிங், வயர்லெஸ் சார்ஜிங் என ஒன்பது புது Smart Outfits! HMD Fusion 2 பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
  3. Nothing ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! Nothing Phone 3a Lite இன்று மாலை அறிமுகம்! மலிவு விலையில் Glyph லைட் வருதா?
  4. iQOO ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! iQOO 15 நவம்பரில் கன்ஃபார்ம்! மிரட்டலான அம்சங்கள் உள்ளே!
  5. OnePlus ரசிகர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 15, Ace 6 விலை லீக்! ரூ. 53,100 ஆரம்ப விலையில் 7300mAh பேட்டரி போனா?
  6. Vivo ரசிகர்களே! X300 சீரிஸ் இந்தியாவில் வருது! Zeiss கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் டிசம்பரில் லான்ச்
  7. அடேங்கப்பா! Redmi K90 Pro Max-ல Bose ஆடியோவா? சும்மா தெறிக்குமே! | விலை & ஸ்பெக்ஸ்
  8. 108MP கேமரா, 7500mAh பேட்டரி: பட்ஜெட்ல ஒரு மாஸ் போன்! - Honor Magic 8 Lite லீக்ஸ்
  9. 2.07" AMOLED ஸ்கிரீன், 24 நாள் பேட்டரியா? - Redmi Watch 6 போட்டிருக்கும் மாஸ் பிளான்
  10. ஃபோன் ஸ்டோரேஜ் ஃபுல்லா இருக்கா? இனிமேல் WhatsApp-ல் இருந்தே ஈஸியா க்ளீன் பண்ணலாம்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »