Photo Credit: iQOO
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது iQOO 13 செல்போன் பற்றி தான்.
iQOO 13 டிசம்பர் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. iQOO 13 அக்டோபரில் சீனாவில் வெளியிடப்பட்டது. குவால்காமின் அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்பைக் கொண்ட முதல் கைபேசிகளில் இதுவும் ஒன்றாகும். 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது.
டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்ட பதிவின் படி, iQOO 13 அடிப்படை மாடல் 12GB RAM + 256GB மெமரி விலை இந்தியாவில் 55,000 ரூபாய் விலையில் ஆரம்பம் ஆகும். இதே ஆப்ஷன்களுடன் iQOO 12 செல்போன் வெளியீட்டு விலை 52,999 ரூபாயாக இருந்தது. iQOO வரவிருக்கும் போனுக்கான வங்கி மற்றும் அறிமுக சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில், iQOO 13 விலையானது 12GB RAM + 256GB மெமரி மாடல் தோராயமாக ரூ. 47,200 என்கிற அளவில் தொடங்கி 16GB ரேம் + 1TB மெமரி மாடல் ரூ. 61,400 விலை வரை நிர்ணயம் செய்யப்பட்டது.
iQOO 13 டிசம்பர் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இது Vivo நிறுவனத்தின் துணை பிராண்ட் எனப்படுகிறது. iQOO இ-ஸ்டோர் மற்றும் அமேசான் மூலம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டில் இயங்கும் முதல் செல்போனாக இது இருக்கும்.Q2 சிப் மற்றும் 2K தெளிவுதிறன் மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய Q10 LTPO AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது.
இந்தியாவில், iQOO 13 ஆனது நான்கு முக்கிய ஆண்ட்ராய்டு பதிப்பு மேம்படுத்தல்கள் மற்றும் ஐந்து வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ் 921 சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் சோனி போர்ட்ரெய்ட் சென்சார் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது.
இது 32 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் கொண்டுள்ளது. இது 120W சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. சீனாவில் இன்னும் கூடுதலான பேட்டரி திறனுடன் வெளியானது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்