iQOO 13 செல்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது
Photo Credit: iQOO
iQOO 13 is offered in China in four colour options
iQOO 13 செல்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Qualcomm நிறுவனத்தின் சமீபத்திய octa-core Snapdragon 8 Elite சிப்செட் மூலம் இது இயங்கும். iQOO 13 செல்போன் வடிவமைப்பு குறித்த தகவல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. iQOO நிறுவனம் இந்தியாவில் iQOO 13 செல்போன் மாடல்களின் வெளியீட்டு காலவரிசையை அறிவித்துள்ளது. இந்த போன் அக்டோபர் 30 அன்று சீனாவில் வெளியிடப்பட்டது . வடிவமைப்பு மற்றும் முக்கிய விவரக்குறிப்புகளின் அடிப்படையில் இந்தியாவிலும் சீன மாடலை ஒத்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
iQOO 13 டிசம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் X தளத்தில் வெளியிட்ட பதவில் உறுதிப்படுத்தியது . BMW மோட்டார்ஸ்போர்ட்டுடனான பிராண்ட் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, நீலம்-கருப்பு-சிவப்பு மூவர்ண வடிவங்களுடன் லெஜண்ட் பதிப்பில் இந்த செல்போன் வருகிறது. இது டிசம்பர் 2023ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய iQOO 12 மாடலை போலவே இருந்தாலும் சற்று மேம்படுத்தப்பட்ட திறனை கொண்டுள்ளது.
iQOO 13 செல்போனின் இந்திய மாடல் அதிகாரப்பூர்வ iQOO இ-ஸ்டோர் மற்றும் அமேசான் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். இந்த செல்போனுக்கான அமேசான் மைக்ரோசைட்டும் தயாராக உள்ளது. ஹாலோ லைட் அம்சத்துடன் இந்த போன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 2K LTPO AMOLED டிஸ்ப்ளே பேனலைப் பெறும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. Q2 கேமிங் சிப்செட்டுடன் இணைக்கப்பட்ட Snapdragon 8 Elite SoC சிப்செட் இதில் இருக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
iQOO 13 சீனாவில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC சிப் உடன் அறிமுகம் ஆனது. இந்த Q2 கேமிங் சிப்செட் 16GB வரை ரேம் மற்றும் 1TB வரையிலான மெமரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான OriginOS 5 உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் FuntouchOS 15 நுட்பத்துடன் வெளியாகும். iQOO 13 செல்போனில் 6,150எம்ஏஎச் பேட்டரி 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் இடம்பெற்றுள்ளது.
iQOO 13 ஆனது 6.82-இன்ச் 2K டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 1,440 x 3,168 பிக்சல்கள் கொண்ட BOE Q10 8T LTPO 2.0 OLED திரை ஆகும். 144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR சப்போர்ட் உடன் வருகிறது. கேமரா பொறுத்தவரையில் ஃபோனில் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது. இதில் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் ஆகியவை அடங்கும்.
முன்பக்கம் 32 மெகாபிக்சல் சென்சார்கேமரா உள்ளது. IP68 மற்றும் IP69-ரேட்டட் பில்ட் மற்றும் இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வைஃபை, என்எப்சி, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி சப்போர்ட் செய்கிறது. இது OIS உடன் 4K வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. கேமரா அமைப்பு AI டெலிட் மற்றும் AI புகைப்பட மேம்படு அம்சங்களை வழங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 15 Series Tipped to Get a Fourth Model With a 7,000mAh Battery Ahead of India Launch
Interstellar Comet 3I/ATLAS Shows Rare Wobbling Jets in Sun-Facing Anti-Tail
Samsung Could Reportedly Use BOE Displays for Its Galaxy Smartphones, Smart TVs