Photo Credit: iQOO
iQOO 12 was initially unveiled in China in November last year
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Huawei iQOO 13 செல்போன் பற்றி தான்.
iQOO 13 இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். iQOO 13 ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும். 6,150mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். வரும் டிசம்பரில் வெளியாகும் என தெரிகிறது. 55,000 ரூபாய் விலையில் ஆரம்பமாகும்.
iQOO 12 செல்போன் மாடல் போலவே பல அப்டேட் செய்யப்பட்ட அம்சங்களுடன் iQOO 13 செல்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. iQOO 12 ஆரம்பத்தில் சீனாவில் நவம்பர் 2023ல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது. இப்போது iQOO 13 இதை விட மேம்பட்ட அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிப்ஸ்டர் பாண்டா இஸ் பால்ட் என்ற சீன தளத்தில் இந்த செல்போன் பற்றிய சில தகவல் வெளியிடப்பட்டுள்ளது. iQOO 13 வடிவமைப்பு iQOO ஸ்மார்ட்போன்களின் முதல் தலைமுறையைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்புற பேனலில் 1 மிமீ ஆழத்தில் செங்குத்து ஒளி துண்டு பதிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய iQOO 12 வடிவமைப்பிலிருந்து மாறுபட்டுள்ளது.
iQOO 13 ஆனது 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.78-இன்ச் 2K OLED திரையைக் கொண்டிருக்கும். குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 4 SoC மூலம் இயக்கப்படும். இது குவால்காமின் மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும். இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்காக IP68-மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. iQOO 13 போனில் மேம்பட்ட AI அம்சங்கள் கிடைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. . இது OIS உடன் 4K வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. கேமரா அமைப்பு AI டெலிட் மற்றும் AI புகைப்பட மேம்படு அம்சங்களை வழங்கும்.
iQOO 13 செல்போன் மாடல் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா, 50 மெகாபிக்சல் ஷூட்டர் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் வசதியுடன் வரும் என தெரிகிறது. செல்போனின் முன் பக்க கேமரா 16 மெகாபிக்சல் சென்சாருடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என தெரிய வருகிறது. இது முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO 12 செல்போன் மாடலின் 5000mAh பேட்டரியை விட அதிகமாகும். சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட iQoo Z9 Turbo மொபைலானது 6,000mAh பேட்டரி மற்றும் 80W வயர்டு சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டிருந்தது.
மேலும் வைஃபை, என்எப்சி, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி சப்போர்ட் செய்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்