ஐபோன் XR தயாரிப்பு தள்ளுபடிக்குப் பிறகு ரூ. 53,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐபோன் XR தயாரிப்பு தள்ளுபடிக்குப் பிறகு ரூ. 53,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீங்கள் ஐபோனை வாங்க நெடு நாட்களாக காத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் இதுதான் உங்களுக்கான சரியான சமயம். ஆப்பிள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஐபோன் கடைகளில் ஐபோன்XR, ரூ.76,900 இருந்து குறைந்து ரூ.59,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த குறுங்கால தள்ளுபடியுடன் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் ஐபோன் விலை குறைந்து (64ஜிபி) மாடல் ரூ.53,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தயாரிப்பின் 128ஜிபி மாடல் (ரூ.58,400)க்கும், 256ஜிபி மாடல் (ரூ.67,400)க்கும் தள்ளுபடியின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களாக இல்லாதவர்களுக்கு 128ஜிபி மாடல் (ரூ.64,900)க்கும், 256ஜிபி மாடல் (ரூ.74,900)க்கும் தள்ளுபடியின் அடிப்படையில் எம்.ஆர்.பி-இல் இருந்து குறைந்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த தயாரிப்புகளை 12/24 மாதங்கள் தவணைத் திட்டதிலும் பெற முடிகிறது.
| ஐபோன் XR தயாரிப்பு | விலை | ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாடிக்கையாளராக இல்லாதவர்களுக்கான விலை | ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கான விலை |
|---|---|---|---|
| ஐபோன் XR 64GB | ரூ.76,900 | Rs. 59,900 | Rs. 53,900 |
| ஐபோன்XR 128GB | ரூ.81,900 | Rs. 64,900 | Rs. 58,400 |
| ஐபோன் XR 256GB | ரூ.91,900 | Rs. 74,900 | Rs. 67,400 |
இதன் மூலம் பழைய ஐபோன் வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன்களுக்கு மாறும் வாய்பை ஆப்பிள் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு மூலம் ஐபோன் XR நேரடியாக சாம்சங் கேலக்ஸி எஸ்10e ( ₹ 55,900), சாம்சங் கேலக்ஸி எஸ்10+ மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 (₹ 62,000) போன்களுடன் மோதுகிறது.
சாம்சங் தயாரிப்பு மட்டுமின்றி (₹ 37,999) விற்பனை செய்யப்பட்ட ஓன்பிளஸ் 6T போனுடன் கொஞ்சம் கூடுதலாக செலவழித்து மக்கள் ஐபோன்XR போனை தேர்ந்தெடுப்பார்கள் என ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. 6.1 இஞ்ச் திரை கொண்ட இந்த ஐபோன் தயாரிப்பு சிறந்த பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Operation Undead Is Now Streaming: Where to Watch the Thai Horror Zombie Drama
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online