யூடியூப் சேனல் நடத்தும் டாலாஸை சேர்ந்த மேன் ப்ளஸ் ரிவர் என்பவர், ஐ ஃபோன் எக்ஸ் அலைபேசியை நதியில் கண்டுபிடித்தார்
Photo Credit: YouTube/ Man + River
சென்ற வருடம் ஆப்பிள் நிறுவனம் ஐ ஃபோன் எக்ஸ் மாதிரியை வெளியிட்டது. இது மாசு மற்றும் தண்ணீர் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு மீட்டர் நீரில் 30 நிமிடம் வரை அலைபேசி தாங்கும்.
'மென் + ரிவர்' யூடியூப் சேனல் நடத்தும் டாலாஸ் என்பவர், ஐ ஃபோன் எக்ஸ் அலைபேசியை நதியில் கண்டுபிடித்தார். இவர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர் தொலைத்த மற்றும் இடமாற்றப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை கண்டுபிடித்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பார்.
போர்ச் சங்கிளாஸ் முதல் 10 காரட் தங்க மோதிரம் வரை கண்டுபிடித்த இவர், ஐ ஃபோன் எக்ஸ் அலைபேசி நீர் மூடி இல்லாமல் கண்டார். இதில் ஆச்சிரியம் என்றால், அந்த அலைபேசி செயல்பட்டது.
முடி உலர்த்தியின் உதவியுடன், சிலிகா ஜெல் கொள்கலனில் அலைபேசியை வைத்து மூன்று நாட்களுக்கு பின்னர் வெளியே எடுத்தார். மின்னூட்டல் செயல்பட்டு, அந்த அலைபேசி மீண்டும் வழக்கம் போல் வேலைப் பார்த்தது ஆச்சிரியத்தை அளித்தது.
இதன் பின், அலைபேசியின் உரிமையாளர் அலிஸாவை கண்டுபிடித்து, அவரிடம் அலைபேசியை அனுப்பினார். அலிஸாவின் குழந்தையின் படங்கள் இருப்பதைக் கண்டு பெருமிதம் கொண்டார்.
ஒரு வகையில் இந்த அலைபேசி மீண்டும் வேலை செய்தாலும், ஆப்பிள் நிறுவனம் தண்ணீர் சேதத்திற்கு உத்திரவாதம் அளிப்பதில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Control Ultimate Edition Arrives on iPhone and iPad With Touch Controls, Universal Purchase