Photo Credit: Apple
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது iPhone SE 4 செல்போன் பற்றி தான்.
பட்ஜெட் செக்மென்ட் ஆப்பிள் பிரியர்கள் இப்போது iPhone SE 4 வருகைக்காக நம்பிக்கையுடன காத்திருக்கின்றனர். iPhone SE 4 Face ID, Apple Intelligence வசதிகளுடன் வருகிறது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் iPhone SE 4 அறிமுகப்படுத்த ஆப்பிள் தயாராகி வருவதாக ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் கூறினார். வரவிருக்கும் iPhone SE 4 மலிவு விலையில்புதிய iPad Air மற்றும் இன்னும் பிற சாதனங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. iPhone SE 4 செல்போனில் முகப்பு பட்டனுக்கு பதிலாக Face ID வரும். இது ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் பழைய ஹோம் பட்டன் வடிவமைப்பில் இருந்து விலகி, சமீபத்திய iPhone SE 4 மாடலில் எட்ஜ்-டு-எட்ஜ் திரைக்கு மாறும் என்று கூறப்படுகிறது. இந்த ஃபோன் Face ID மூலம் செல்போனை ஓபன் செய்ய வைக்கும். Apple Intelligence சப்போர்ட் செய்யும் என்று கூறப்படுகிறது. இது இப்போது iPhone 16 மற்றும் உயர்நிலை iPhone 15 மாடல்களில் மட்டுமே கிடைக்கிறது.
iPhone SE 4 கேமராவை பொறுத்தவரையில் 48-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் வரும். இது 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.06-இன்ச் பேனலைப் பெற வாய்ப்புள்ளது. இது ஆப்பிளின் A18 சிப்செட்டில் 6GB மற்றும் 8GB LPDDR5 ரேம் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது அலுமினியம் சைட் ஃபிரேம் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சிக்னேச்சர் பட்டன் மாடலான ஹோம் பட்டனை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒற்றை கண் போன்ற வடிவத்தில் சிங்கிள் ரியர் கேமராவுடன் iPhone SE 4 போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விலை சுமார் ரூ. 42,000 முதல் ரூ. 46,000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது . iPhone SE (2022) ஆனது அடிப்படை 64GB மாடல் ரூ. 35,000 ஆரம்ப விலையுடன் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது வரும் மார்ச் 2025 இல் உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம் அல்லது அதற்கு முன்பாகவும் சந்தைக்குள் நுழையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மேக் மினி, மேம்படுத்தப்பட்ட மேக்புக் ப்ரோஸ் மற்றும் எம்4 சிப் மற்றும் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களுடன் கூடிய iMacs ஆகியவையும் 2025 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய iPhone SE 4 சாதனம் USB-C போர்ட் உடன் வெளிவரும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்