iPhone SE 2 ஜனவரி 2020-ல் வெகுஜன உற்பத்திக்குச் செல்ல திட்டமிடப்பட்டு மார்ச் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று
Apple-watching ஆய்வாளர் Ming-Chi Kuo கூறியுள்ளார். முன்னதாக, Apple-ன் புதிய iPad Pro, புதிய MacBook மற்றும் 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஒரு augmented reality (AR) headset-ஐ வெளியிட தயாராகி வருவதாக குவோ (Kuo) கூறினார்.
iPhone SE 2 வெளியீடு:
இந்த சாதனம் iPhone 8-ஐப் போலவே இருக்கும் என்று குவோ (Kuo) எதிர்பார்க்கிறார். மேலும் இது தற்போதுள்ள iPhone 6 மற்றும் iPhone 6s உரிமையாளர்களுக்கான பிரபலமான மேம்படுத்தல் விருப்பமாக இருக்கும் என்று நம்புகிறார். குவோ (Kuo) பகிர்ந்த முதலீட்டாளர் குறிப்பை மேற்கோள் காட்டி மேக்ரூமர்ஸ் (MacRumors) திங்களன்று தெரிவித்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு "முக்கிய வளர்ச்சி இயக்கி" ("key growth driver") என்றும் கூறப்படுகிறது.
3GB LPDDR4X RAM உடன் ஐபோன் 11-ல் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த தொலைபேசியில் Apple A13 SoC இருக்கும் என்றும் 399 டாலர் (சுமார் ரூ. 28,200) விற்கத் தொடங்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார் - இது அறிமுகமான அசல் iPhone SE போன்றது. 4.7-inch LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர் கூறியிருந்தார்.
iPhone SE 2-ல் 3D Touch அம்சம் இருக்காது என்று குவோ (Kuo) கூறியிருந்தார். இது ஐபோன் 11-லிருந்து நிறுவனத்தால் அகற்றப்பட்டது. மேலும், இது Touch ID fingerprint reader பயன்படுத்தும், Face ID-ஐ அல்ல. பட்ஜெட் ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு விருப்பங்களிலும், Red, Silver மற்றும் Space Grey நிறங்களில் வரும் என்று கூறப்படுகிறது. iPhone SE 2 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குபெர்டினோ (Cupertino) நிறுவனம் ஐபோன் 8 விற்பனையை நிறுத்தி புதிய பிரசாதத்திற்கு இடமளிக்கும் என்றும் யூகிக்கப்படுகிறது. ஆப்பிள் iPhone SE 2-ன் 30-40 மில்லியன் யூனிட்களை, 2020 முழுவதும் விற்பனை செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்