iPhone Air 2 2026-ல் இரண்டு ரியர் கேமராக்கள், விலை குறைவாக, ரோட்மேப் புதியதாக தெரிகிறது
Photo Credit: iPhone
ஆப்பிள் உலகத்துல இப்போ ஒரு பெரிய "லீக் போர்" போயிட்டு இருக்கு. கொஞ்ச நாளா என்ன பேசிக்கிட்டு இருந்தாங்கன்னா, "iPhone Air முதல் மாடல் சரியா விற்கல, அதனால இதோட அடுத்த வெர்ஷன் 2027-ல தான் வரும்"னு எல்லாரும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா, இப்போ "Fixed Focus Digital" அப்படிங்கிற ஒரு பிரபலம், "நீங்க சொல்றதெல்லாம் தப்பு, iPhone Air 2 அடுத்த வருஷமே (2026) வரும்"னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுருக்காரு. ஆப்பிள் வழக்கமா அவங்களோட புது ஐபோன் மாடல்களை செப்டம்பர் மாசம் தான் ரிலீஸ் பண்ணுவாங்க. இந்த லீக்கர் சொல்றது படி பார்த்தா, 2026 செப்டம்பர்ல iPhone 18 சீரிஸ் கூடவே இந்த 'iPhone Air 2'-வும் வந்துடும். மத்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் "ஆப்பிள் இந்த மாடலை ஷெட்யூல்ல இருந்து தூக்கிட்டாங்க"ன்னு சொன்னப்போ, இவரு மட்டும் "கண்டிப்பா வரும், குறிச்சு வச்சுக்கோங்க"ன்னு சவால் விடுறாரு.
Phone Air முதல் மாடல்ல ஒரே ஒரு கேமரா தான் இருந்துச்சு, அதுவும் விலை ரொம்ப அதிகமா இருந்துச்சு. இதுதான் அந்த போன் சுமாரான ஹிட் ஆகக் காரணம். ஆனா Air 2-ல ஆப்பிள் ரெண்டு விஷயத்தை மெயினா மாத்தப்போறாங்களாம்:
இதே லீக்கர் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லிருக்காரு. iPhone 17e இப்போவே மாஸ் புரொடக்ஷன்ல இருக்காம். இது 2026 மார்ச் மாசம் நடக்கப்போற ஸ்பிரிங் ஈவென்ட்லயே ரிலீஸ் ஆகிடும். இதுல கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
மொத்தத்துல, 2026 வருஷம் ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தா இருக்கப்போகுது. நீங்க iPhone Air 2-க்காக வெயிட் பண்றீங்களா? இல்ல iPhone 18 Pro தான் உங்க சாய்ஸா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.
...மேலும்