Photo Credit: Apple
சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3) உலகளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. பட்டியலில் இடம் பிடிக்க iPhone 15 காரணமாக அமைந்துள்ளது. ஐபோன் 15 சீரியஸில் இருந்து பல மாடல்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தது . இதற்கிடையில், சாம்சங் பட்டியலில் அதிக இடங்களைப் பிடித்தது Galaxy S செல்போன் சீரியஸ் 2018க்குப் பிறகு முதல் முறையாக டாப் 10 தரவரிசையில் நுழைந்தது. முதல் 10 இடங்களை பிடித்த ஸ்மார்ட்போன் உலக அளவிலான செல்போன் விற்பனையில் 19 சதவீத பங்காக உள்ளன.
Counterpoint Research வெளியிட்ட தகவல்படி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3) உலகளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஐபோன் 15 உலகிலேயே அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக இருந்தது. அதை தொடர்ந்து iPhone 15 Pro Max மற்றும் iPhone 15 Pro ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன. டாப் 10 பட்டியலில் ஆப்பிள் மொத்தம் நான்கு இடங்களைப் பிடிக்க முடிந்தது. ஐபோன் 14 ஏழாவது இடத்தில் உள்ளது.
உயர்தரமான ஸ்மார்ட்போன்களுக்கான விருப்பம் மக்களிடையே அதிகரித்து வருவதால், ஆப்பிள் அதன் நிலையான மற்றும் ப்ரோ மாடல்களுக்கு இடையிலான விற்பனை இடைவெளியைக் குறைத்துள்ளது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மூன்றாம் காலாண்டில் ப்ரோ வகை ஐபோன் விற்பனையில் பாதி பங்களித்தது இதுவே முதல் முறையாகும். இது ஆப்பிள் அதிக மதிப்புள்ள சாதனம் என்கிற நிலையை அடைய உதவியது.
மறுபுறம் சாம்சங் OEM எனப்படும் அசல் உபகரணங்கள் உற்பத்தியாளர் பட்டியலில் அதிக ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்த நிறுவனமாக உள்ளது. அதிகம் விற்பனையான ஐந்து செல்போன் மாடல்களில் நான்கு சாதனங்கள் பட்ஜெட் ஏ-வரிசையைச் சேர்ந்தவை. இருப்பினும் Samsung Galaxy S24 ஆனது பத்தாவது இடத்தைப் பிடிக்க முடிந்தது. 2018 ஆம் ஆண்டிலிருந்து டாப் 10 தரவரிசையில் நுழையும் முதல் Galaxy S-தொடர் சாதனமாக மாறியது. தென் கொரிய தொழில்நுட்பக் குழுமமான சாம்சங் ஆரம்பம் மற்றும் நடுத்தர விலை செல்போன் தயாரிப்பில் பெரிய வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆப்பிள் மற்றும் சாம்சங் இரண்டும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் உயர்மட்டத்தில் தங்கள் நிலைகளைத் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஐபோன் மாடல்கள் ஆப்பிள் நுண்ணறிவுடன் AI அம்சங்களைப் பெறுகின்றன.
சாம்சங் கைபேசிகள் Galaxy AI மூலம் இயக்கப்படுகின்றன. இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களும் பட்ஜெட் சாதன தயாரிப்பில் முன்னிலையில் உள்ளன. டாப் 10 விற்பனையான செல்போன்கள் பட்டியலில் Redmi 13C 4G தரவரிசையில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3) உலகளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் மற்றும் சாம்சங் தவிர அதிக விற்பனை எண்ணிக்கையை எட்டிய ஒரே நிறுவனம் Xiaomi மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மலிவு விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், தாராளமாக இந்த புதிய Redmi 13C 4G ஸ்மார்ட்போன் மாடலை வாங்கலாம்
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்