Photo Credit: iHelp BR
2019 ஐபோன் மாடல்களின் வெளியீடு அருகில் உள்ளது, மேலும் ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வு அடுத்த மாதம் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று iOS 13 புகைப்படங்கள் தெரிவிக்கிறது. மேம்பாட்டாளர்களுக்காக வெளியிடப்பட்ட ஏழாவது சோதனை iOS 13 பதிப்பில் இது காணப்பட்டது, மேலும் கணினி கோப்புகளில் உள்ள ஒரு படம் இதைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு, ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வு தேதி முதலில் இதேபோன்ற முறையில் வெளியானது, பின் அது உண்மையாக மாறியது, இதன் மூலம் இந்த சமீபத்திய iOS 13 குறியீடு கண்டுபிடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபட வேண்டி உள்ளது.
கணினிக்கான iOS 13 அமைப்பின் புதிய படங்களைச் வெளியிடப்பட்டுள்ளது, அவற்றில் கணினி முகப்புத் திரையில் செப்டம்பர் 10, அதாவது செவ்வாய்க்கிழமை என்ற தேதி காண்பிக்கிறது. இந்த படங்கள் முதல் முறையாக புதிய ஸ்மார்ட்போன்களை அமைக்கப் பயன்படும், மேலும் இவை அனைத்தும் இந்த ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி நிகழ்வில் ஐபோன் 11 தொடர் வெளியீட்டை குறிக்கிறது என எதிர்பார்க்கப்டுகிறது.
இந்த படங்களை முதன்முதலில் கண்டறிந்தவர் iHelp BR, iOS 13 அமைப்பை பெறும் பழைய ஐபோன்கள் மற்றும் ஐபாட்களின் படங்களில் செப்டம்பர் 23 தேதி காண்பிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான தகவலின்படி, புதிய ஸ்மார்ட்போன்கள் ஐபோன் 11, ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன் 11 மேக்ஸ் என்று அழைக்கப்படும். ஐபோன் 11 ஸ்மார்ட்போன் ஐபோன் XR-க்கு அடுத்தபடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது 6.1 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் இரண்டு பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கலாம். ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 மேக்ஸ் ஆகியவை ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஆகியவற்றின் அடுத்த வரிசை ஸ்மார்ட்போனாக இருக்கும், அவை முறையே 5.8-இன்ச் மற்றும் 6.5-இன்ச் திரைகளை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா தொகுதி உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிளின் ஏ12 பயோனிக் சிப்செட்களின் வாரிசான ஏ13 சிப்களால் அடுத்த தலைமுறை ஐபோன்கள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில், சாப்ட் பேங்க் தலைவர் கென் மியாச்சி, புதிய ஐபோன் மாடல்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று கூறியிருப்பது, இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்பதை மேலும் உறுதிபடுத்துகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்