ஆப்பிளின் கூற்றுப்படி, iOS 26.4-இன் 'Playlist Playground' அம்சம், பயனர்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் பிளேலிஸ்ட்களை உருவாக்க வல்லது.
iPhone 17 வரிசை அறிமுகத்தைத் தொடர்ந்து, iOS 26 முதன்முதலில் செப்டம்பரில் வெளியிடப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களுக்கான iOS 26.4 அப்டேட்டை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஐபோன் இயங்குதளத்தின் நான்காவது முக்கிய அப்டேட் இதுவாகும். இந்த அப்டேட்டில் ஆப்பிள் மியூசிக்கில் 'பிளேலிஸ்ட் பிளேகிரவுண்ட்' (Playlist Playground) மற்றும் முழுத்திரை பின்னணிகள், ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2 (AirPods Max 2) ஆதரவு மற்றும் எட்டு புதிய எமோஜிகள் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட 'சிரி' (Siri) போன்ற ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) அம்சங்கள் இந்த அப்டேட்டில் இடம்பெறவில்லை.
பிளேலிஸ்ட் பிளேகிரவுண்ட்: செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பயனர்களின் குறிப்புகளுக்கு (Prompts) ஏற்ப பிளேலிஸ்ட்களை இது உருவாக்கும். பயனர்கள் தங்களின் மனநிலை (Mood) அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வைக் கூறினால், அதற்குப் பொருத்தமான பாடல்களைத் தலைப்பு மற்றும் விளக்கத்துடன் இது பட்டியலிடும். இது தற்போது 'பீட்டா' (Beta) பதிப்பில் உள்ளது.
கான்சர்ட் டிஸ்கவரி: பயனர்களுக்குப் பிடித்த கலைஞர்களின் நேரடி இசை நிகழ்ச்சிகள் (Live shows) அருகில் எங்கு நடைபெறுகின்றன என்பதைக் கண்டறிய இது உதவும்.
ஆஃப்லைன் மியூசிக் ரெகக்னிஷன்: இணைய வசதி இல்லாமலேயே பாடல்களை அடையாளம் காண இது உதவும். மீண்டும் இணையம் கிடைக்கும்போது அதன் முடிவுகளைக் காட்டும்.
ஆம்பியன்ட் மியூசிக் விட்ஜெட்: தூக்கம், அமைதி, வேலை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பாடல்களை முகப்புத் திரையிலிருந்தே (Home Screen) இயக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
ஐபோன் பயனர்களுக்கு எட்டு புதிய எமோஜிகள் கிடைத்துள்ளன. இதில் ஓர்கா திமிங்கிலம், டிரம்போன் (Trombone), பாலே நடனக் கலைஞர், நிலச்சரிவு மற்றும் ஒரு வித்தியாசமான சிதைந்த முகம் (Distorted face) ஆகியவை அடங்கும்.
பிரகாசக் குறைப்பு (Reduce Bright Effects): திரையில் தோன்றும் அதிகப்படியான ஒளி மின்னல்களைக் குறைக்கப் புதிய செட்டிங்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. சப்டைட்டில் கட்டுப்பாடு: வீடியோக்களில் சப்டைட்டில்களைக் கையாளுவது இனி எளிதாகும்.
ஃப்ரீஃபார்ம் (Freeform): இதில் படங்கள் உருவாக்கம் மற்றும் எடிட்டிங் செய்யப் புதிய கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ரிமைண்டர்கள் (Reminders): முக்கியமான வேலைகளை 'அவசரம்' (Urgent) என்று குறியிடும் வசதி மற்றும் ஸ்மார்ட் லிஸ்ட்களில் மேம்பட்ட ஃபில்டரிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. கீபோர்டு மேம்பாடு: வேகமாக டைப் செய்யும்போது எழுத்துப் பிழைகள் குறையும் வகையில் கீபோர்டு துல்லியம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999